ADDED : செப் 06, 2019 11:13 AM

செப்.11 பாரதியார் நினைவு நாள்
* நடந்தது நடந்தாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லதாகட்டும் என்று நம்பி முயற்சியில் ஈடுபடு.
* ஏமாற்றாமல் வாழ்வதே ஆன்மிகம். அந்நிலையில் மனிதன் தெய்வநிலைக்கு உயர்கிறான்.
* தன்னிடத்தில் உலகையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே உண்மையில் கண்ணுடையவன்.
* கோயில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமையும், வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமையும் உண்டாகும்.
* குறைகளைப் பொறுக்கும் தன்மை அன்புக்கு உண்டு. உண்மையாக நேசிப்பவர்கள் கோபம் கொள்வதில்லை.
* மனம் போன போக்கில் செல்லாதே. அறிவு காட்டும் பாதையில் செல்.
* எந்த தொழிலையும் முடியாது என கைவிடாதே. திறமை யுள்ளவனிடம் பணியாளாக இருந்து கற்றுக் கொள்.
* மனதில் உற்சாகம் இருந்தால் உடல்நிலை தீவிரமடையும். உடம்பைத் தீவிரப்படுத்தினால் மனம் புத்துணர்வு பெறும்.
* கவலை, பயத்திற்கு உள்ளத்தை இரையாக்காதே. தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடு.
* தவறில் இருந்து உன்னை திருத்திக் கொள்வதில் தயக்கம் கொள்ளாதே.
* உள்ளத்தில் கர்வம் நுழைந்தால் தர்மத்தின் பிடியில் இருந்து நழுவி விடுவாய்.
* 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்ற எண்ணமுடன் வாழ்ந்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* படிப்படியான வளர்ச்சி நிலைக்கும். வேகமான அசுர வளர்ச்சியோ காணாமல் போகும்.
* துணி வெளுக்க மண்ணும், தோல் வெளுக்க சாம்பலும் உண்டு. ஆனால் மனதை வெளுக்க வழியில்லையே?
வாழ்த்துகிறார் தேசியக்கவி