sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

முருகனின் அருள் பெற்றவர்கள்

/

முருகனின் அருள் பெற்றவர்கள்

முருகனின் அருள் பெற்றவர்கள்

முருகனின் அருள் பெற்றவர்கள்


ADDED : நவ 05, 2010 03:32 PM

Google News

ADDED : நவ 05, 2010 03:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகப்பெருமானின் அருள்பெற்ற அருளாளர்கள் அகத்தியர், அருணகிரியார் என்று எண்ணிக்கையில் அடங்காது. அவர்களே நமக்கு குருவாக இருந்து குருவருளையும், முருகப்பெருமானின் திருவருளையும் தந்தருள்கின்றனர்.

அகத்தியர்: முருகன் அருள்பெற்ற அடியார்களின்  முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அகத்தியர். செந்தமிழ்நாடான இப்பகுதியை அகத்தியமுனிவரே முருகனிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாகக் கூறுவர்.

நக்கீரர்: கடைச்சங்கப்புலவராய் மதுரைநகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர். முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக் குகையில் கிடந்த போது, முருகனே காப்பாற்றியதாகக் கூறுவர். அப்போது முருகன் மீது பாடிய பாடலே திருமுருகாற்றுப்படையாகும்.

அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியார்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகப்பெருமான், இவரிடம்''பாட்டி, சுட்டபழம்வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் நம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.

குமரகுருபரர்: திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடிஅனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் இவர் எழுதிய நூல்களில் சிறப்பானதாகத் திகழ்கிறது. காசியில் மடம் ஒன்றை அமைத்தார்.

தேவராய சுவாமிகள்: பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நூலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராய சுவாமிகள் ஆவார். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களை சூட்சுமமாகக் கொண்ட நூல் இதுவாகும். படிப்போரைக் கவசம் போல் காப்பதில் ஈடுஇணையற்ற இந்நூல் இதுவாகும். இவர் சென்னிமலை என்னும் ஊரில் வாழ்ந்தவர் என்பது இவரது பாடல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ராமலிங்க வள்ளலார்: 'அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!' என்று கடவுளை கருணைவடிவில் கண்டு போற்றியவர் வள்ளலார். சிறுவனாக இருக்கும்போது கண்ணாடியின் முன்னர் தியானம் செய்யும்போது மயில்வாகனத்தில் முருகப்பெருமான் இவருக்கு காட்சி அளித்தார் என்பர். கந்தகோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தப்பெருமானின் இவர் கேட்கும் வரங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.

பாம்பன் சுவாமிகள்: யாழ்ப்பாணத்தில் சைவமரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமரகுருதாசசுவாமிகள் என்னும் பெயர் கொண்டிருந்த இவர், ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பனில் வாழ்ந்ததால் 'பாம்பன் சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்.முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். பல அற்புதங்களைச் செய்தார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயணத்திற்கு மிகவும் உகந்ததாகும். 






      Dinamalar
      Follow us