sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நெல் குத்தி சுவாமி

/

நெல் குத்தி சுவாமி

நெல் குத்தி சுவாமி

நெல் குத்தி சுவாமி


ADDED : ஆக 30, 2019 02:46 PM

Google News

ADDED : ஆக 30, 2019 02:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் அருகிலுள்ள தீவனுார் கிராமத்தில் நெல்குத்தி விநாயகர் குடியிருக்கிறார். கணபதி லிங்கம் எனப்படும் இவர் தீபாராதனையின் போது மட்டும் விநாயகர் வடிவத்தில் காட்சியளிப்பார்.

செஞ்சி பகுதியை தேசிங்கு ராஜா ஆட்சி செய்த காலம் அது. அப்போது ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர், வயலில் விளைந்திருந்த நெற்கதிர்களை திருடி ஓரிடத்தில் குவித்தனர். கற்களை எடுத்து நெல்லைக் குத்தி அரிசியாக்கி கொண்டனர். ஒருநாள் நெல் குத்த சரியான கல் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நீண்ட தேடலுக்குப் பின் சிறுவன் ஒருவன், யானை முகம் கொண்ட கல் ஒன்றை கண்டான். அது நெல் குத்த பயன்படாது என அனைவரும் கூறியதால் நெற்கதிர்களை அங்கேயே வைத்து விட்டு வேறு கல்லைத் தேடிச் சென்றனர். திரும்பிய போது, நெல் குத்தப்பட்டிருப்பது கண்டு அதிசயித்தனர்.

''இது சாதாரண கல் இல்லை! நெல் குத்தி சுவாமி! இதை பத்திரப்படுத்த வேண்டும்'' என ஓரிடத்தில் மறைத்தனர். மறுநாள் கல்லைக் காணவில்லை. அப்போது குளத்தில் தண்ணீர் கொப்பளித்ததைக் கண்டனர். அந்த இடத்திற்குள் கல் கிடக்கவே, அதை எடுத்து மீண்டும் பத்திரப்படுத்தினர்.

இந்நிலையில் விவசாயிகள் நெற்கதிர்கள் திருட்டு போவது குறித்து வருந்தினர். பெரிய தனக்காரரான ஏகாம்பர கவுண்டரிடம் புகார் செய்தனர். விசாரணையில் சிறுவர்கள் சிலர் நெற்கதிர்களை திருடுவதும், யானை வடிவ கல் ஒன்றில் நெல்லை குத்துவதும் தெரிய வந்தது. அன்றிரவு பெரிய தனக்காரரின் கனவில் விநாயகர் தோன்றி, நெல் குத்தி கல்லாக தான் இருப்பதை தெரிவித்து கோயில் கட்ட உத்தரவிட்டார். பெருமாள் பக்தரான அவருக்கோ இதில் உடன்பாடு இல்லை. 'கடவுள் ஒருவரே; அவரே வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறார்' என பகவத்கீதையின் மேற்கோள் ஒன்றை உறவினர் ஒருவர் எடுத்துச் சொல்லி, கோயில் கட்டும் பணியில் ஈடுபடுத்தினார்.

ஒருமுறை இக்கோயிலின் பூஜாரி மிளகு வியாபாரி ஒருவரிடம் நைவேத்யத்திற்கு கொஞ்சம் மிளகு தருமாறு வேண்டினார். விரும்பாத வியாபாரி தன்னிடம் உளுந்து இருப்பதாக பொய் சொல்லி விட்டு சந்தைக்குச் சென்றார். அங்கு மிளகு மூடை, உளுந்து மூடையாக மாறி இருந்தது. தவறை உணர்ந்த வியாபாரி விநாயகரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார். பொய் சொன்னதை தடுத்ததால் 'பொய்யாமொழி விநாயகர்' என பெயர் பெற்றார். கோயிலின் பின்புறம் உள்ள விழுது இல்லாமல் மூன்று ஆலமரங்கள் உள்ளன. திருமணம், குழந்தை பாக்கியம், மன அமைதி பெற வேண்டி பக்தர்கள் இவற்றை சுற்றுகின்றனர்.

எப்படி செல்வது: திண்டிவனம் - செஞ்சி வழியில் 12 கி.மீ.,

விசஷே நாட்கள்: விநாயகர் சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி,பிரதோஷம்

நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி

தொடர்புக்கு: 94427 80813

அருகிலுள்ள தலம்: நாகவர்ணப்பெருமாள் கோயில் நகர் கிராமம், திண்டிவனம், முருகசேரி வழியாக 22 கி.மீ.,






      Dinamalar
      Follow us