sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!

/

எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!

எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!

எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!


ADDED : ஏப் 15, 2013 03:37 PM

Google News

ADDED : ஏப் 15, 2013 03:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, வெற்றி இவற்றை வழங்கவல்ல பேரொளியாக இறைவன் இருக்கிறான். அந்தப் பேரொளியை நோக்கி திரும்புங்கள்.

* உண்மையான வெற்றி என்பது உங்களை நீங்களே வெல்வதில் தான் இருக்கிறது. தன்னை வென்றவன், இயற்கையின் மீது கூட, ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலைப் பெறுகிறான்.

* வாழ்வில் சந்திக்கும் துன்பம், சோதனை இவற்றால் மனநிலை பாதிக்கும். இருந்தாலும் விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள். தோல்விக் கான காரணத்தை அறிந்து அதை திருத்த முயலுங்கள்.

* தோழனே! ஒரு செயலில் வெற்றி பெற முடியாதோ என எண்ணாதே. முன்வந்து பார். உன்னால் நிச்சயம் வெல்ல முடியும்! வியர்வை சிந்தி பாடுபட்டால் வெற்றி உறுதி. எத்தனை முறை தோற்றாலும் முயற்சியைக் கைவிடாதவனே உண்மையான வெற்றியாளன். அவனை உள்ளத்தில் உலகம் வைக்கும்.

* <உங்களை மற்றவர்களோடு அழகு, செல்வம், பலம் இவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். இதனால் பொறாமை உணர்வு வளர்கிறது என்ற உண்மையை உணருங்கள்.

* நீங்கள் என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். உங்களுடைய தனித்தன்மை உலகில் வேறு யாருக்குமில்லை. நீங்கள் இறைவனின் ஒப்பற்ற படைப்பு.

* உங்களிடமுள்ள நல்ல, கெட்ட எண்ணங்கள் இரண்டையும் கவனிக்கத் தொடங்குங்கள். மனம் என்னும் வயலில் தீயஎண்ணம் என்னும் களைகளைப் பிடுங்கி எறியுங்கள். நல்ல எண்ணம் என்னும் பயிரை மட்டும் வளர விடுங்கள்.

* ஒருபோதும் உங்களுடைய குறைபாடுகளைக் கண்டு மனம் தளராதீர்கள். மனம் தளரும்போது தோல்வி மனப்பான்மை உருவாகி விடுகிறது. இதற்கு இடமளிக்கக் கூடாது.

* எந்த ஒரு விஷயத்திலும் பேச்சளவில் இது தான் குறிக்கோள் என்று வேகமாகத் தீர்மானிக்கிறோம். ஆனால், அதற்கான முயற்சியில் இறங்கும்போது தயங்குகிறோம்.

* ''இன்று விட்டுவிடலாம். நாளை பார்த்துக் கொள்வோம்'' என்று ஒருபோதும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஊக்கத்துடன் செயல்படுவதில் வெற்றி அடங்கியிருக்கிறது.

* மற்றவர்கள் உங்களுக்கு எதிராக என்ன கூறினாலும் பொருட்படுத்த வேண்டாம். இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் அவனோடு இருக்கிறீர்கள். மற்றதைப் பற்றி என்ன கவலை?

* நீங்கள் பிறரால் அச்சுறுத்தப்படும்போது, அமைதியை சிறிதும் இழக்காதீர்கள். இந்தநிலையை எட்டிவிட்டால் நம்மிடம் இருக்கும் 'தான்' என்ற அகந்தை உணர்வை வெற்றி பெற்றுவிட்டதாகப் பொருள்.

* இறைவன் உலகில் ஒரு குறிப்பிட்ட பணிக்காகவே உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* வேலையின் காரணமாக இறைவனையோ அல்லது இறைவனுக்காக வேலையையோ புறக்கணிக்காதீர்கள். இறைவனை மகிழ்விப்பதற்காக பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்துடன் வேலை செய்யுங்கள்.

பரமஹம்ச யோகானந்தர் புத்தாண்டு முழக்கம்






      Dinamalar
      Follow us