sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனக்கதவை திறந்திடுங்கள்

/

மனக்கதவை திறந்திடுங்கள்

மனக்கதவை திறந்திடுங்கள்

மனக்கதவை திறந்திடுங்கள்


ADDED : ஆக 18, 2017 10:25 AM

Google News

ADDED : ஆக 18, 2017 10:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரு பக்கம் கடவுள் என்னும் அருட்சக்திக்காவும், மறுபக்கம் பொய் என்னும் பகைச் சக்திக்காகவும் வாழ்வு நடத்தாதீர்கள். நேர்மை, உண்மைக்காகவும் மட்டும் உங்கள் மனக்கதவு திறந்திருக்கட்டும்.

* நாம் கடவுளை நோக்கி ஒரு அடி வைத்தால், அவர் நம்மை நோக்கி நூறு அடி வந்து விடுவார். நாம் அனைவரும் அவரது கையில் உள்ள தேர்ந்த கருவியாக இருக்க முயற்சிக்க வேண்டும்.

* இடையூறு என்பது நம்மை சுற்றியுள்ள சூழலில் இருந்து உண்டாவதாக கருதுவது தவறு. உண்மையில் இடையூறு நமக்குள் இருந்தே உருவாகிறது. எதை கொடுத்தாலும், யாருக்கு கொடுத்தாலும் அதை கடவுளுக்கே கொடுக்கிறோம் என்னும் உணர்வை வளர்த்துக் கொண்டால் எதிரி என்ற சொல்லுக்கு இடமிருக்காது.

* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று உலகில் ஏதுமில்லை. அது போல உங்களின் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.

* உத்தம செயல்களில் ஈடுபட நினைத்தால், அதை உடனடியாகச் செய்வதே சிறந்தது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அதை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடலாம்.

* சோர்வு, உங்களை சோர்வடைய செய்ய அனுமதிக்காதீர்கள். அதிலிருந்து விலகி நின்று அதற்கான காரணத்தை அறிய முற்படுங்கள். எப்பாடுபட்டாவது சோம்பலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

வழிகாட்டுகிறார் அரவிந்தர்






      Dinamalar
      Follow us