sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பழநியப்பா.. பழம் நீயப்பா...

/

பழநியப்பா.. பழம் நீயப்பா...

பழநியப்பா.. பழம் நீயப்பா...

பழநியப்பா.. பழம் நீயப்பா...


ADDED : ஜன 29, 2018 09:28 AM

Google News

ADDED : ஜன 29, 2018 09:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தல வரலாறு

விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவர். இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை எடுத்து வந்தான். வலியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம்.

திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. எனவே அவரை எதிர்க்க துணிந்தான். அவன் மீது தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்து கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், 'தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக் கோயிலில் மூலவராக காட்சி தருகிறார்.

நவபாஷாண மூர்த்தி

மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணி சிலை நவபாஷாணம் எனும் மூலிகை கலவையால் ஆனது. இந்தச்சிலை உயிர்ப்புள்ளது என்பதும், அதற்கு வியர்க்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவாமியின் வெப்பத்தை தணிக்க, கொடுமுடி தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. சுவாமியின் மீது பூசி எடுக்கப்படும் ராக்கால சந்தனமும், கவுபீன தீர்த்தமும் மருத்துவ குணம் கொண்டவை. இவர் கையில் உள்ள தண்டம் அருள் வாய்ந்தது.

பழநி கோயில் பயோடேட்டா

மூலவர் : குழந்தை வேலாயுதர் (அடிவாரம்) தண்டாயுதபாணி (மலைக் கோயில்),

உற்சவர் : முத்துக்குமாரசுவாமி (பெரியநாயகி அம்மன் கோயில்)

தல விருட்சம்: நெல்லி மரம்

தீர்த்தம் : சண்முக நதி

ஆகமம் : சிவாகமம்

புராண பெயர் : திருஆவினன்குடி

பாடியவர்கள் : அருணகிரிநாதர், நக்கீரர்

தலச்சிறப்பு

இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை, போகர் சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்தில் தான், காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

690 படிகள்

மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும். யானைப் பாதை என்னும் படியல்லாத வழியும் உண்டு.வின்ச், ரோப்கார் வசதி இருக்கிறது.

மலைக்கோயில் பூஜைநேரம்

காலை 06:00 மணி நடைதிறப்பு

காலை 07:00 - விளாபூஜை

காலை 08:00 - சிறுகால சந்தி

காலை 09:00 - காலசந்தி

மதியம் 12:00 - உச்சிக்கால பூஜை

மாலை 05:30 - சாயரட்சை

இரவு 08:30 - அர்த்தஜாமபூஜை

இரவு 09:00 - நடைஅடைப்பு

குறிப்பு: விழாக்காலங்களில் காலை 4:00 முதல் இரவு 11:00 மணி வரை நடை திறந்திருக்கும். பூஜை நேரம் மாறுபடும்.

திறக்கும் நேரம்: திருஆவினன்குடி குழந்தை வேலாயுதர், மலைக்கோயில், பெரிய நாயகி கோயில் காலை 6:00 - இரவு 9:00 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும்.

திருவிழா

தைப்பூசம் : (ஜனவரி/பிப்ரவரி)

பங்குனி : (மார்ச்/ஏப்ரல்)

வைகாசி விசாகம் : (மே/ஜூன்)

கந்த சஷ்டி : (அக்டோபர்/நவம்பர்)

திருக்கார்த்திகை : (நவம்பர்/டிசம்பர்)

இருப்பிடம்

திண்டுக்கல்லில் இருந்து 56, மதுரையிலிருந்து 120, கோவையிலிருந்து 115 கி.மீ.

போன்: 04545 - 242 293, 242 236

பழநியின் சிறப்பம்சம்

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 3வது படை வீடு இது. மூலவரை தனது பாடல்களில் 'சித்தன்' என்று அவ்வையார் அழைக்கிறார். தமிழ் இலக்கியங்களில் 'சித்தன் வாழ்வு' என சிறப்புடன் அழைக்கப்படுகிறது. சேர, பாண்டிய மன்னர்கள் போற்றிய திருத்தலம். முருகனை அன்போடு நினைப்பவர்க்கு, ஆராத முக்தி தரும் தலம். பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது. மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் உள்ள தலம். தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினமும் தங்கத்தேர் இழுப்பது இங்கு தான்.

ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம். தமிழக கோயில்களில், அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை தரும் முதல் கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்பு, சேரமான் பெருமான் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது.

அக்னி நட்சத்திரத்தில் கிரிவலம்

பழநியில் எல்லா நாட்களிலும் கிரிவலம் வரலாம் என்றாலும், அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. ஏனெனில், இந்த மலையே ஒரு அருமருந்தாக அமைந்துள்ளது. வெப்ப நோய்களில் இருந்து காத்துக்கொள்ள அக்னி நட்சத்திர கிரிவலம் நல்லது.

முதல் வணக்கம் இடும்பனுக்கே!

தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பனுக்கு சந்நிதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சந்நிதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது. இடும்பனுக்கு பூஜைசெய்த பின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை 3:௦௦ மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, 5:00 மணிக்கு பூஜை செய்வர். அதன் பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி துாக்கிச்செல்லும் பக்தர்கள் இவரது சந்நிதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய (நடனம்) பின்பே செல்கின்றனர். இடும்பன் சந்நிதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் உள்ளனர். இங்கு அகத்தியர் இருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது.






      Dinamalar
      Follow us