sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை!

/

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை!

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை!

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை!


ADDED : ஜன 29, 2018 09:43 AM

Google News

ADDED : ஜன 29, 2018 09:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முருகனின் வெற்றி வேலை வழிபட்டால் நம் முன்வினைப் பாவம் ஓடி விடும். மயிலை வணங்கினால் பயம் நீங்கி தைரியம் பிறக்கும்.

* முருகனின் திருவடிகளை நம்பி சரணடைந்தால், வாழ்வில் ஆறுதல் நிலைத்திருக்கும்.

* கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்தையே, தன் இருப்பிடமாக கொண்டிருக்கிறான் முருகன்.

* பலபேர் கூடி கையெழுத்திட்ட விண்ணப்பத்திற்கு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பர். அதுபோல கூட்டுப் பிரார்த்தனைக்கும் உடனடியாக தீர்வு அளிப்பார்.

* குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான், தண்ணீருக்கல்ல. அது போல் கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்.

* எந்த வேளையும் கடவுளை நினைக்க வேண்டும். அது முடியவில்லையானால், காலையில் எழும்போது, உணவு உண்ணும் போது, இரவு துாங்கும் போதாவது நினைக்க வேண்டும்.

* உலகம் என்னும் கடவுளின் சன்னதியில் நாம் வாழ்கிறோம். அதனால், நல்ல சிந்தனை, சொல், செயல் என்று நம்மை இறைவனோடு மட்டுமே தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும்.

* ஒருவரை பலவிதமான புகைப்படம் எடுப்பது போல, பக்தர்களுக்கு அருள்புரிய பலவித வடிவங்களில் கடவுள் தோன்றுகிறார்.

* தேங்காய் உடைத்ததும் வெண்மையான பருப்பு தெரியும். மனதை சுத்தமாக வைத்துக் கொள் என்பதே இதன் தத்துவம்.

* மற்றவர் தயவில் கிடைக்கும் பால் சோற்றை விட, சுய உழைப்பில் கிடைக்கும் தண்ணீரும் சோறும் உயர்வானது.

* இரவில் தேவையானதை பகலில் தேடி வைத்துக் கொள்வது போல, முதுமையில் தேவையானதை இளமைக் காலத்தில் தேட வேண்டும்.

* உண்மை பேசுங்கள். தர்மவழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், குருவை தெய்வமாக வழிபடுங்கள். இவையே நல்லவர்களின் இயல்பு.

* கடவுள் நமக்குச் செய்வது அத்தனையும் அருள் தான். சில சமயத்தில் சோதனை போல வாழ்வில் துன்பம் நேருவதாக தோன்றலாம். அதுவும் கூட அறியாமையே.

* உன் குணம் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்து பார். அதுவே உயர்ந்த பண்பு.

* ஒரு விதை நுாறாக பெருகுவது போல, செயலின் பலனும் நுாறாக பெருகி நம்மை வந்து சேரும்.

* தெய்வத் தன்மையை அடையவே நாம் பிறந்திருக்கிறோம் எனவே, உருவத்தில் மனிதனாகவும், உள்ளத்தில் மிருகமாகவும் இருப்பது கூடாது.

நல்வழி காட்டுகிறார் வாரியார்






      Dinamalar
      Follow us