ADDED : செப் 23, 2019 10:17 AM

* பொறுமை என்னும் நற்குணம் உள்ளவரை விட்டு பெருமை விலகுவதில்லை.
* பூமி போல பொறுமையுடன் இரு.
* உயிர் இருப்பதன் அடையாளமே பிறர் மீது அன்பு செலுத்துவது தான்.
* பிறருக்கு நல்லதை மட்டும் செய். அனைவரிடமும் இனிமையாகப் பேசு.
* உயிரை விட மேலானதாக ஒழுக்கத்தை போற்று.
* தர்ம வழியில் நடப்பவனும், பிறருக்கு தீங்கு நினைக்காதவனும் திருமகள் அருளை பெறுவர்.
* மறந்தும் கூட பிறருக்கு கேடு நினைக்காதே.
* இரக்கம் இல்லாதவன் வானுலகில் வாழ முடியாது.
* பிறருக்கு சொந்தமான பொருளை திருட நினைத்தாலும் கூட தீமை உண்டாகும்.
* மனதை உண்மை ஒன்றே துாய்மைப்படுத்தும்.
* தீங்கு செய்யத் துாண்டும் எண்ணம், கோபத்தால் தான் உண்டாகிறது.
* தனக்கு துன்பம் வரக் கூடாது என்று விரும்புபவன், பிறருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்.
* கொலை செய்யத் துணிந்தவனிடம் எல்லா பாவச் செயல்களும் குடியிருக்கும்.
* ஆசையை ஒழித்தால் மட்டுமே துன்பம் இல்லாத நிலையை அடையலாம்.
* அழியாத செல்வம் கல்வி மட்டுமே. மற்ற செல்வங்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பதில்லை.
* கேடில்லாத செல்வம் கல்விச் செல்வம். ஏழு பிறவிக்கும் நமக்கு துணையாக வரும்.
* செய்த நன்றியை மறக்க கூடாது. அதற்கு பிராயச்சித்தம் கிடையாது.
* பயனில்லாத சொற்களை மறந்தும் பேசக்கூடாது.
* கடும் சொற்களை பேசுவது, பழம் இருக்க காய்களை உண்பது போலாகும்.
* மனிதன் பிறந்தால் பூமியில் புகழுடன் வாழ வேண்டும்.
* நழுவிய ஆடையை இறுக்கி கட்டும் கை போல, ஆபத்தில் உதவுபவனே நண்பன்.
சொல்கிறார் திருவள்ளுவர்