sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உண்மைக்கு உபதேசமா

/

உண்மைக்கு உபதேசமா

உண்மைக்கு உபதேசமா

உண்மைக்கு உபதேசமா


ADDED : அக் 21, 2018 08:07 AM

Google News

ADDED : அக் 21, 2018 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையின் பாதையில் செல்பவனுக்கு, உபதேசம் தேவையில்லை. எல்லா நற்குணங்களும் தேடி வரும்.

* அடக்கம் இல்லாத துறவியை விட, அடக்கமுடன் வாழும் இல்லறத்தான் மேலானவன்.

* பாவத்திற்குரிய தண்டனையை அனுபவிக்காமல், சொர்க்கத்தில் யாரும் நுழைய முடியாது.

* 'எனக்கு மரணமில்லை' என யாரால் சொல்ல முடியுமோ, அவர் மட்டுமே அடுத்த நாளின் மீது ஆசை வைக்க முடியும்.

* கோபம் அன்பை அழிக்கிறது; ஆணவம் அடக்கத்தை அழிக்கிறது; பொறாமை நற்குணங்கள் அனைத்தையும் அழிக்கிறது.

* வேரிலிருந்து மரமும், அதிலிருந்து கிளைகளும் வருவது போல, அடக்கத்திலிருந்து தர்மமும், அதிலிருந்து நற்பண்புகளும் வருகின்றன.

* எல்லோருக்கும் துன்பம் நேர்கிறது என்ற உண்மையை உணர்பவனே அறிஞன்.

* தியானத்தின் மூலம் அறிவை துாய்மையாக்கிக் கொண்டால், கொடிய துன்பத்தையும் எளிதாக கடக்கலாம்.

* புல்லின் மீது படந்திருக்கும் பனித்துளி போல மனித வாழ்வு நிலையில்லாதது.

* உயிர்களைக் கொல்லவோ அல்லது அதற்கு உடன்படவோ கூடாது. மீறினால் தீராத பாவத்திற்கு ஆளாக நேரும்.

மறுக்கிறார் மகாவீரர்






      Dinamalar
      Follow us