ADDED : ஜன 30, 2023 12:40 PM

* ஆற்றுநீர் போல உனது லட்சியத்தை நோக்கி ஓடு.
* எப்போதும் விடாமுயற்சி செய். நீயும் அறிஞனாகலாம்.
* நல்லவரோடு நட்பு கொள். உன் வாழ்வு பிரகாசமாகும்.
* எதையும் கூச்சப்படாமல் கற்றுக்கொள். வாழ்க்கையில் முன்னேறலாம்.
* மனதில் நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
* பிறருக்கு அடிமையாக வாழாதே.
* நன்றாக படி. அதுவே உன்னை காப்பாற்றும்.
* உனது உழைப்பால் வரும் பணமே சிறந்தது.
* உன் கஷ்டத்திலும் பங்கெடுப்பவர்களே நல்ல உறவினர்கள்.
* கடவுள் அருள் இல்லாமல் உன்னால் எதையும் செய்ய முடியாது.
* பெரியவர்கள் கோபப்பட்டால் அதில் அர்த்தம் இருக்கும்.
* எதிலும் தயக்கம் கொள்ளாதே.
* பிறர் தயவில் வாழாதே.
* உனது கஷ்டத்திலும் உதவி செய்பவனே நல்ல நண்பன்.
* ஒருவர் செய்த உதவியை மறக்காதே.
* பொய் பேசினால் பிரச்னையில் சிக்குவாய்.
* நீ உயர்வதும், தாழ்வதும் உனது பேச்சில்தான் உள்ளது.
நம்பிக்கை தருகிறார் சாணக்கியர்

