ADDED : ஜூன் 12, 2020 01:19 PM

* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம்.
* பாவத்தின் திறவுகோல் ஆசை.
* ஞானத்தின் திறவுகோல் அன்பு.
* மனதின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும்,
* சரி செய்யவும் தியானமே வழி.
* புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சிக்கு அசையாதவனே அறிஞன்.
* ஆசையை ஒழித்தால், தாமரை இலை தண்ணீர் போல துன்பம் மனிதனை தீண்டுவதில்லை.
* எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பது தான் பண்பட்ட மனிதனின் அடையாளம்.
* தடைகள் இல்லாவிட்டால் மனம் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாக நேரிடும்.
* உடல், நாக்கு, மனம் மூன்றையும் அடக்கியாள்பவனே உண்மையான அடக்கம் கொண்டவன்.
* ஒருவனுக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் அவனவன் செயல்களே காரணம்.
* அன்பே உலகின் மகாசக்தி. இதை அறிந்தவன் வாழ்வே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.
* தோன்றிய அனைத்தும் ஒருநாள் அழியும். இது குறித்து கவலைப்படுவது அறிவுடைமையாகாது.
தெளிவுபடுத்துகிறார் புத்தர்