ADDED : மார் 27, 2021 04:37 PM

மார்ச் 26 - ஸித்தி தினம்
* நெற்றிக்கு அழகு சேர்க்கும் திருநீற்றைப் பூசுவதால் அழகும், அறிவும் உண்டாகும்.
* முடிந்தால் பிறருக்கு கொடுங்கள். முடியாவிட்டால் பிறர் கொடுப்பதை தடுக்காதீர்கள்.
* மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்க கூடாது. விளையாட்டாகக் கூட பொய் பேசக் கூடாது.
* கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இல்லாமல் இருப்பதே பக்தி.
* அதர்மம் அதிகரிக்கும் போது கடவுளின் அவதாரம் மண்ணில் நிச்சயம் நிகழும்.
* தைரியத்தை இழக்கக் கூடாது. உலகில் எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு மட்டுமே உண்டு.
* உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை மனிதனுக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்திடும்.
* நல்லவர்களுக்கு உதவுங்கள். ஒருபோதும் அவர்களின் மனம் நோகச் செய்யாதீர்கள்.
* கோபத்தை அறவே கைவிட்டவர் வாழ்வில் துன்பத்திற்கு இடமிருக்காது.
* தர்மத்தைக் காப்பதற்காக பொய் சொல்லலாம். சுயநலத்தால் பொய் பேசுவது பாவம்.
* ஆபத்து நேரத்தில் கைகொடுத்தும், தக்க சமயத்தில் இடித்துரைப்பதும் நண்பனின் கடமை.
* உண்மையும், பொறுமையும் உயர்வுக்கு வழிவகுக்கும். தீய நடத்தை தாழ்நிலைக்கு ஆளாக்கும்
* நேர்மை தவறாதவர்கள் சொல்லும் வார்த்தைகள் அப்படியே பலிக்கும்.
நெறிப்படுத்துகிறார் ஜெயேந்திரர்