sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பக்தன் சொல்லைக் கேட்பான்

/

பக்தன் சொல்லைக் கேட்பான்

பக்தன் சொல்லைக் கேட்பான்

பக்தன் சொல்லைக் கேட்பான்


ADDED : பிப் 12, 2013 12:35 PM

Google News

ADDED : பிப் 12, 2013 12:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடவுள் சொன்னால் பக்தன் கேட்பான்! பக்தன் சொன்னால், கடவுள் கேட்க வேண்டுமென்று கட்டாயம் இருக்கிறதா என்ன! ஆனால், காஞ்சிபுரம் திருவெக்காவிலுள்ள பெருமாள் பக்தன் சொன்னதைக் கேட்டார். சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பட்டத்தையும் பெற்றார்.

தல வரலாறு:





காஞ்சியில், பிரம்மா அஸ்வமேத யாகம் தொடங்கினார். ஆனால், அவரது மனைவி சரஸ்வதிக்கு அதில் விருப்பமில்லை. மனைவியில்லாமல் யாகம் நடத்தக் கூடாது என்பதால், இன்னொரு தேவியான சாவித்திரியுடன் யாகத்தில் ஈடுபட்டார். இதையறிந்த சரஸ்வதி, வேகவதி என்னும் நதியாக மாறி யாககுண்டத்தை அழிக்க வந்தாள். பிரம்மா விஷ்ணுவை தியானித்தார், விஷ்ணு அந்த நதியின் குறுக்கே படுத்து தடுத்து பிரம்மாவுக்கு அருள்புரிந்தார். அந்த தலமே திருவெக்கா.

சொன்னதைக் கேட்டவர்:





திருமழிசை ஆழ்வார். திருவெக்கா பெருமாளுக்கு சேவை செய்து வந்தார். கோயிலில் பணி செய்த ஒரு மூதாட்டியை, அவள் விரும்பிய படி, இளம்பெண்ணாக மாற்றினார் ஆழ்வார். அவளை பல்லவ மன்னன் தன் மனைவியாக ஏற்றான். காலம் சென்றது. மன்னனுக்கு வயதானது. ஆனால், மனைவியின் இளமை மாறவில்லை. தானும் இளமையாக இருக்க விரும்பிய மன்னன், ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனை அணுகினான். கணிகண்ணன் இதுகுறித்து ஆழ்வாரிடம் பேச மறுத்ததால் அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த ஆழ்வார், சீடனுடன் வெளியேற முடிவு செய்தார்.

பெருமாள் சந்நிதிக்குச் சென்று,''நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை.

எனவே எங்களுடன் வா,'' என அழைத்தார்.

பெருமாளும் பாம்பு படுக்கையை சுருட்டியபடி ஆழ்வாருடன் புறப்பட்டார். பக்தர் சொன்னதை ஏற்றுக் கொண்டவர் என்பதால் இவருக்கு 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என பெயர் உண்டானது. வடமொழியில் 'யதோக்தகாரி' என்பர். பின், மன்னன் ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு, பெருமாளை காஞ்சியிலேயே தங்கச் செய்தான்.

மாறிய சயனக்கோலம்:





இக்கோயில் 108 திருப்பதிகளுள் ஒன்று. பெருமாள் இடமிருந்து வலமாக சயனிப்பதே வழக்கம். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் புறப்பட்டுச் சென்று, மறுபடி வந்து படுத்ததால் பெருமாள் இங்கு மட்டும் வலமிருந்து இடமாக மேற்கு நோக்கி சயனித்திருக்கிறார். தாயாரின் திருநாமம் கோமளவல்லி. பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்.

இருப்பிடம் :





காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2கி.மீ.,

திறக்கும்நேரம்:





காலை6-11.30,மாலை4- இரவு 8

போன்:





044 3720 9752

சி.வெங்கடேஸ்வரன், சிவகங்கை






      Dinamalar
      Follow us