sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஓணம் துவங்கும் முதல் கோவில்

/

ஓணம் துவங்கும் முதல் கோவில்

ஓணம் துவங்கும் முதல் கோவில்

ஓணம் துவங்கும் முதல் கோவில்


ADDED : செப் 05, 2016 10:34 AM

Google News

ADDED : செப் 05, 2016 10:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரளத்தில் ஓணத்திருவிழா துவங்கும் முதல் பூர்ணத்திரயேஸ்வரர் கோவில், எர்ணாகுளம் அருகிலுள்ள திருப்பூணித்துறையில் உள்ளது.

தல வரலாறு: இப்பகுதியில் வாழ்ந்த அந்தண தம்பதிக்கு குழந்தை இல்லை. அந்தணருக்கு பக்தி கிடையாது. அவரது மனைவி விஷ்ணு பக்தை. தன்

கணவனை மன்னித்து தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என வழிபட்டு வந்தாள். அவளுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தும் அவை பிழைக்கவில்லை. இதனால் அந்தணருக்கு பெருமாள் மீது கோபம் அதிகமானது.

ஒருமுறை அவர் துவாரகை சென்றார். அங்கே கிருஷ்ணனை சந்தித்த அந்தணர், “கிருஷ்ணா! உன்னைத் திருமாலின் அவதாரம் என்கிறார்கள். எனக்கு பல குழந்தைகள் பிறந்தும் இறந்து விட்டன. அவற்றைக் காக்கும் பொறுப்பு பூமியில் வாழும் கடவுளான உனக்கில்லையா?” என்றார்.

கிருஷ்ணர் அருகில் இருந்த அர்ஜுனன், “அந்தணரே! ஒருவர் பிறப்பதும் இறப்பதும் விதி வசத்தால் ஆனது. இருந்தாலும், கிருஷ்ண ராஜாவை நீர் தவறாக எண்ணக்கூடாது. எனவே கிருஷ்ணரின் முன்னால் சபதம் செய்கிறேன். இனிமேல் உமக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் பார்த்து கொள்கிறேன். அப்படி இறந்தால் நான் அக்னியில் விழுந்து இறப்பேன்,”என்றான்.

அந்தணர் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். ஆனால், பத்தாவது குழந்தையும் இறந்து விட்டது. இதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன் தீயில் இறங்கத் தயாரானான். கிருஷ்ணர் அவனைத் தடுத்து, “அர்ஜுனா! நீ அந்தணரிடம், குழந்தை பாக்கியம் வேண்டி கிருஷ்ணனை சரணாகதி அடைய வேண்டும் என கூறாமல், பிறக்கும் குழந்தைகளை இறக்காமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று ஆணவத்துடன் கூறினாய். எனவே தான் பத்தாவது குழந்தை இறந்து விட்டது,” என்றார்.

அர்ஜுனன் தலை குனிந்தான். அவனது அகங்காரம் அழிந்தது. ஆனாலும், அவன் தான் ஏற்ற சபதப்படி அக்னியில் விழுந்து வைகுண்டம் சேர்ந்தான். அங்கே மகாவிஷ்ணு ஒரு லிங்கத்தை கையில் வைத்து தியானத்திலிருந்தார். அர்ஜுனன் அவரிடம், “பகவானே! எனது ஆணவம் அழிந்தது. அந்தணருக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாற்றவேண்டும்,”என வேண்டினான்.

மகாவிஷ்ணு அர்ஜுனனிடம் அந்த லிங்கத்தைக் கொடுத்து, “இந்த லிங்கத்தை, அந்தணர் வாழும் ஊரில் பிரதிஷ்டை செய். அந்தணரை வழிபடச் சொல். இது சந்தான பாக்கியத்தை தரக் கூடியது,” என்றார். அதன்படி அர்ஜுனன் இத்தலம் வந்து அந்த லிங்கத்தை பெருமாளின் கையில் இருக்கும்படி வைத்து, ஒரு சிலை வடித்தான். பெருமாளாக இருந்தாலும், சிவனுக்குரிய ஈஸ்வரப் பட்டத்தையும் சேர்த்து, 'பூர்ணத்திரயேஸ்வரர்' என்ற பெயர் சுவாமிக்கு அமைந்தது.

சிறப்பு: இங்குள்ள கூத்தம்பலத்தில் நந்தி உள்ளது. கேரளாவிலுள்ள கோவில்களிலேயே இங்கு தான் முதன் முதலாக ஓணத்திருவிழா துவங்கும். இதன்பிறகு தான் மற்ற கோவில்களிலும், வீடுகளிலும் ஓணக் கொண்டாட்டம் ஆரம்பமாகும். பெருமாளே அமைக்கச் சொன்ன கோவில் என்பதால் இந்த மரியாதை தரப்படுகிறது. 'கடா விளக்கு' எனப்படும் அணையாவிளக்கு இங்கிருக்கிறது. இது ரிக், யஜுர், சாம வேதங்களை குறிக்கும் வகையில் 3 அடுக்குகளை கொண்டது. குழந்தை இல்லாதவர்கள் இந்த விளக்கை ஏற்றி வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டை 'உலப்பன்னா' என்கின்றனர். 'பல்குண தீர்த்தம்' கோவிலின் உள்ளே இருக்கிறது.

நேரம்: காலை 4:00 - 11:15, மாலை 4:00 - 8:30 மணி.

இருப்பிடம் எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ.

தொலைபேசி 0484 - 277 4007






      Dinamalar
      Follow us