/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பணிவு பணிந்து பணிந்து ஜெயிக்கும்
/
பணிவு பணிந்து பணிந்து ஜெயிக்கும்
ADDED : ஜூன் 30, 2020 10:12 AM

* பணிவுள்ளவன் அனைவரின் அன்புக்குரியவனாகி வெற்றி இலக்கை அடைவான்.
* கடவுள் நமக்கு அருள் புரிவதில் நிகரற்ற தன்மை கொண்டவர்.
* இவன் சிறியவன்; இவனால் என்ன பயன் என யாரையும் அவமதிப்பது கூடாது.
* சாப்பிடும் போது அவசரமோ, நிதானமோ காட்ட வேண்டாம்.
* செய்த பாவங்களை பிறரிடம் சொல்வதால் பாவம் குறையும்.
* எல்லா உயிர்களையும் போற்றி வாழ்தலே சிறந்த அறமாகும்.
* தன்னைத்தானே சுயசோதனை செய்பவன் தீமையிலிருந்து விலகி நன்மை அடைவான்.
* இந்தப் பிறவியில் செய்யும் நற்செயலின் பலன் அடுத்த பிறவியில் கிடைக்கும்.
* எல்லாம் தெரிந்தவரோ, ஏதும் தெரியாதவரோ உலகில் ஒருவரும் இல்லை.
* வீரம், புகழ் இன்றி நீண்டகாலம் வாழ்வதை விட இவற்றுடன் சிலகாலம் வாழ்வது சிறப்பு.
* நல்லவன், கெட்டவன் என்பது ஒருவனின் மனதைக் கொண்டு முடிவு செய்தல் வேண்டும்.
* மற்றவரைக் கெடுத்து வாழாமல் நல்வழியில் உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும்.
* கோபத்தோடு வருபவனிடம் கூட குளிர்ந்த முகத்துடன் பேசினால் கோபம் தணிந்துவிடும்.
சொல்கிறார் வாரியார்

