sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

காணக்கிடைக்காத கயிலை

/

காணக்கிடைக்காத கயிலை

காணக்கிடைக்காத கயிலை

காணக்கிடைக்காத கயிலை


ADDED : மே 06, 2013 01:22 PM

Google News

ADDED : மே 06, 2013 01:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதன் வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய புனிததலம் திருக்கைலாயம். இது திபெத் பகுதியில் உள்ளது. நேபாள தலைநகர் காட்மாண்டு சென்று, சீன எல்லையிலுள்ள கோட்டாரி, ஜாங்மூ வழியாக கயிலாயத்தை அடையலாம்.

இந்த மலை பூமியில் இருந்து 6638 மீ. உயரத்தில் உள்ளது. இதன் தென்முகம் நீலக்கல் போலவும், கிழக்கு முகம் ஸ்படிகம் போல வெண்மையாகவும், மேற்கு முகம் சிவப்புக் கல் போலவும், வடக்குமுகம் தங்கம் போல பொன்நிறமும் கொண்டுள்ளது. இதன் புனித தன்மையை ரிக்வேதம், ராமாயணம், உபநிஷதம், சிவபுராணம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

மானசரோவர் ஏரி:





கயிலாயம் செல்லும் வழியில் உள்ள ஏரி மானசரோவர். இது கடல் மட்டத்தில் இருந்து 14,950 அடி உயரத்தில் உள்ளது. பிரம்மா தன் மனதிலிருந்து, இந்த ஏரியை உருவாக்கியதால் 'மானசரோவர்' என்ற பெயர் ஏற்பட்டது. 'சரோவர்' என்றால் 'குளம்'. இதனை பார்வதியின் அம்சமாகக் கருதுவர். இங்கிருந்தபடி தேவி சிவனை எப்போதும் பூஜிப்பதாக ஐதீகம். இங்குதான் கங்கை, சட்லெஜ், கர்னாலி, பிரம்மபுத்திரா, சிந்து ஆகிய நதிகள் உற்பத்தியாகின்றன.

நீலநிறக் கடல் போல காட்சியளிக்கும் மானசரோவரில் நீராடினால் மனோசக்தி பெருகும். சக்தி பீடங்களில் அம்பிகையின் வலது முன்கை விழுந்த இடமாக மானசரோவர் கருதப்படுகிறது.

மாந்தாதா மலை:





கைலாயம் செல்லும் வழியில் மாந்தாதா மலை உள்ளது. ராமனின் முன்னோர்களில் ஒருவரான மாந்தாதா, இங்கு தவமிருந்து இறையருளைப் பெற்றார். அவர் பெயரையே மலைக்குச் சூட்டியுள்ளனர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட ஆறு தீப்பொறிகள், முருகனாக அவதரித்த சரவணப்பொய்கையும், விநாயகரை பார்வதி தேவி அவதரிக்கச் செய்த இடமும் இந்த மலையில் இருக்கின்றன. இது 25,355 அடி உயரத்தில் உள்ளது.

பரிக்ரமா:





கயிலாய மலையைச் சுற்றி வருவதற்கு 'பரிக்ரமா' என்று பெயர். இதன் சுற்றளவு 52 கி.மீ.. பரிக்ரமா செல்லும் வழியில் ஆங்காங்கே பனி உருகி நீர்வீழ்ச்சி போல விழுந்து கொண்டிருப்பது கண்கொள்ளாக் காட்சி. திபெத்தைச் சேர்ந்த 'பொம்பா' மதத்தினர் கைலாயத்தை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடி சுற்றி வருகின்றனர். இது அவர்களின் பக்தியுணர்வையும், உடல் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.

இயற்கை கோயில்:





மனிதர்களால் கட்டப்பட்ட கோயில் எதுவும் கயிலாயத்தில் இல்லை. கயிலாய மலை இயற்கையாக அமைந்த கோயில். இங்கு நூற்றுக்கணக்கான சிறு மலைகள் கோபுரம் போல உள்ளன. இவை 500 முதல் 1000 அடி உயரம் கொண்டவை. செங்குத்தாக அமைந்திருக்கும் இம்மலைகள் மீது ஏற முடியாது. சதுரம், வட்டம்,முக்கோண வடிவில் உள்ளன. சிவன் நித்யவாசம் புரியும் கொலு மண்டபமான கயிலாயத்தில் சிவகணங்கள், தேவர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், தேவதைகள் வீற்றிருப்பதாக ஐதீகம். இந்த மலையைத் தரிசித்தால் நம் முன்வினைப் பாவம் நீங்கி சிவபுண்ணியம் சேரும்.






      Dinamalar
      Follow us