sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மகிழ்ச்சி தரும் மந்திர சாவி!

/

மகிழ்ச்சி தரும் மந்திர சாவி!

மகிழ்ச்சி தரும் மந்திர சாவி!

மகிழ்ச்சி தரும் மந்திர சாவி!


ADDED : ஆக 22, 2017 09:49 AM

Google News

ADDED : ஆக 22, 2017 09:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மகிழ்ச்சிக்குரிய மந்திரச்சாவி நம் மனதில் இருக்கிறது. கோடீஸ்வரன் முகத்தில் கவலையும், ஏழையின் முகத்தில் மகிழ்ச்சியும் இருக்கலாம். மனதைப் பொறுத்தே இது அமையும்.

* மற்றவர் தயவில் கிடைக்கும் பால் சோற்றை விட சுய உழைப்பில் கிடைக்கும் தண்ணீரும் சோறும் உயர்வானது.

* இரவில் தேவையானதை பகலில் தேடி வைத்து கொள்வது போல, முதுமையில் தேவையானதை இளமை காலத்தில் மனிதன் தேட வேண்டும்.

* குளிக்காதவன் மீது ஆற்றுக்கு கோபம் உண்டாகாது. அதுபோல கடவுளும் தன்னை வணங்காதவர்களை தண்டிப்பதில்லை.

* பலர் கையெழுத்திட்ட விண்ணப்பத்திற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பர். அது போல பலரின் கூட்டுப் பிரார்த்தனைக்கும் கடவுள் உடனடியாக தீர்வு அளிப்பார்.

* உண்மையை பேசுங்கள். தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், குருவை தெய்வமாக வழிபடுங்கள். இவையே நல்லவர்களின் இயல்பு.

* கடவுள் நமக்கு செய்வது அத்தனையும் அருள் தான். சில சமயத்தில் சோதனை போல வாழ்வில் துன்பம் நேருவதாக தோன்றலாம். அதுவும் கூட நம் அறியாமையே.

தருகிறார் வாரியார்






      Dinamalar
      Follow us