sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பெற்ற தாயும் பாரத அன்னையும் ஒன்றே!

/

பெற்ற தாயும் பாரத அன்னையும் ஒன்றே!

பெற்ற தாயும் பாரத அன்னையும் ஒன்றே!

பெற்ற தாயும் பாரத அன்னையும் ஒன்றே!


ADDED : நவ 27, 2019 12:04 PM

Google News

ADDED : நவ 27, 2019 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.5 - அரவிந்தர் நினைவு நாள்

* பெற்ற தாயும், பாரத அன்னையும் ஒன்றே. அவளை போற்றிக் காப்பது நம் கடமை.

* தீமையை எதிர்க்காமல் இருக்காதே. அதைத் தடுத்து தர்மத்தைக் காக்க வீரமுடன் எழுந்திரு.

* மங்களமானவர் கடவுள். அவர் செய்யும் தீமையிலும் கூட நன்மை நிச்சயம் இருக்கும்.

* கடவுளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. அதை மறந்து தெய்வீக அறிவில் குறை காண்பது நல்லதல்ல.

* அருட்சக்தி ஒரு போதும் கண்மூடித்தனமாக வேலை செய்வதில்லை. அது ஒருபோதும் வீணாவதில்லை.

* கண்களில் பயமின்மை, கபடமற்ற குணம் இருக்கட்டும். பேச்சிலும் ஆவேசம் தவிர்த்து இனிமை கலக்கட்டும்.

* கவலையற்ற சிரிப்பு, அஞ்சாத நெஞ்சம், சந்தோஷ மனப்பான்மை, நன்னம்பிக்கை கொண்டவனாக எப்போதும் இரு.

* சுகத்தை மட்டுமே விரும்புவதால் துக்கத்தை கண்டு அஞ்சுகிறாய். அதனால் அடுத்தவரை அண்டிப் பிழைக்கும் நிலை உருவாகிறது.

* 'நான்' என்ற அகந்தை எப்படி வந்தாலும் களைவது நல்லது.

* பராசக்தியிடம் உன்னை ஒரு கருவியாக்கு. அவளின்றி உன்னால் எதுவும் செய்ய முடியாது.

* பராசக்தியை வழிபடு. எல்லாச் செயல்களையும் விரைவாகவும், உறுதியாகவும் நிறைவேற்றி வைப்பாள்.

* உலகை வழிநடத்தும் சர்வஞானி கடவுள்.

* மனிதர்களை நேசிப்பதோடு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள். ஆனால் பாராட்டை எதிர்பார்க்காதே.

* கடவுளின் பணியாளனாக இருப்பது மதிப்பு மிக்கது. அவருக்கு அடிமையாக இருக்க விரும்பாதே.

சொல்கிறார் அரவிந்தர்






      Dinamalar
      Follow us