sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உலகம் கடவுளின் விளையாட்டு மைதானம்

/

உலகம் கடவுளின் விளையாட்டு மைதானம்

உலகம் கடவுளின் விளையாட்டு மைதானம்

உலகம் கடவுளின் விளையாட்டு மைதானம்


ADDED : மே 04, 2017 03:36 PM

Google News

ADDED : மே 04, 2017 03:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகம் கடவுளின் விளையாட்டு மைதானம். இங்கு அவன் நடத்தும் செயல்கள் பற்றி புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது.

* உண்மையைப் பேசு. நல்லதைச் செய். தெய்வத்தை நம்பு. வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வாய்.

* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண் உடையவன்.

* நேர்மை தவறாமல் வாழ்வதோடு, பிறருக்கு உதவி செய்ய விரும்புவோரே மேலானவர்கள். மற்றவர்கள் அனைவரும் கீழ்மக்களே.

* ஊர் மக்களின் ஒற்றுமை கோவிலால் நிறைவேறுகிறது. வீட்டில் வழிபாடு செய்வதால் குடும்ப ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.

* தெய்வம் அறிவு மயமாக இருக்கிறது. அந்த அறிவுக் கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையாக இருக்கிறோம்.

* மனத் தளர்ச்சிக்கு சிறிதும் இடம் தரக் கூடாது. மனம் உற்சாகத்துடன் இருந்தால் உடம்பில் சுறுசுறுப்பும், ஆற்றலும் பெருகும்.

* 'நான்' என்னும் பிரிவு உணர்ச்சி நீங்கி விட்டால், மனிதன் எல்லையற்ற தெய்வ நிலையோடு சேர்கிறான். இதையே சக்தி யோகம் என்று குறிப்பிடுகின்றனர்.

* சமூக மதிப்புடன் வாழும் மனிதனுக்கு நேரும் அவமானம், மரணத்தை விடவும் கொடிய தண்டனையாக இருக்கும்.

* சிறு வயதில் ஏற்படும் எண்ணங்கள் மிகவும் வலிமைமிக்கவை. அவற்றை எளிதில் யாராலும் அசைத்து விட முடியாது.

* அநியாயத்தை அநியாயத்தால் எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அநியாயத்தை நியாயத்தாலும், அதர்மத்தை தர்மத்தாலும் வெற்றி கொள்ள வேண்டும்.

* அச்சம் இருக்கும் வரை மனிதன் அறிவாளியாக முடியாது. அச்சப்படுபவனிடம் இருக்கும் அறிவால், யாருக்கும் நற்பலன் உண்டாகாது.

* அறிவே நம் ராஜாவாக இருக்கிறது. மனமும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும்.

* அன்பு, கொள்கை அளவில் இருந்தால் மட்டும் போதாது. செயலில் வெளிப்பட்டால் மட்டுமே பயனுள்ளதாக அமையும்.

* எந்த விஷயத்திலும் இன்பம், துன்பம் இரண்டும் இருக்கவே செய்கிறது. அறிவின் துணையால் துன்பத்தை நீக்கி, இன்பத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.

* வாழ்வில் பெரிய துன்பங்களை அனுபவித்த பின்னரே, மனிதனுக்கு சிறிய உண்மைகள் புலப்பட ஆரம்பிக்கின்றன.

சொல்கிறார் பாரதியார்






      Dinamalar
      Follow us