/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்... அதன் சூத்திரமோ... அது உன் இடத்தில்!
/
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்... அதன் சூத்திரமோ... அது உன் இடத்தில்!
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்... அதன் சூத்திரமோ... அது உன் இடத்தில்!
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்... அதன் சூத்திரமோ... அது உன் இடத்தில்!
ADDED : மார் 23, 2018 09:51 AM

* கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். உடம்பு என்னும் பாத்திரம் அதற்காகவே அளிக்கப்பட்டிருக்கிறது. அதை இயக்கும் சூத்திரதாரியும் அவரே.
* அறிவால் கடவுளை அடைய முடியாது. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார்.
* கடவுளை தேடி அலைய வேண்டாம். எல்லா உயிர்களிலும் அவர் நிறைந்திருக்கிறார்.
* பொறுமை, நம்பிக்கை என்னும் இரு காணிக்கைகளை மட்டுமே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
* கடவுள் மீது முழு கவனம் செலுத்துபவருக்கு துன்பத்தில் இருந்து முற்றிலும் விடுதலை கிடைக்கும்.
* உலகில் ரகசியம் என எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிபவராக கடவுள் இருக்கிறார்.
* ஆணவம் சிறிதும் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் சேவை செய்யுங்கள்.
* எளிமையாக வாழ விரும்புங்கள். கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளில் ஈடுபடாதீர்கள்.
* உலகம் என்ன நினைக்கிறது என கவலைப்பட வேண்டாம். உள்ளம் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம். எப்போதும் அதில் உயர்வான எண்ணம் மட்டுமே உதிக்க வேண்டும்.
* எதிரி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு நீங்கள் ஒரு வார்த்தை பேசுங்கள்.
* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம்.
* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். அவர்களைகஷ்டப்படுத்தி பாவத்திற்கு ஆளாகாதீர்கள்.
* உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே நேரம் அளவுக்கு அதிகமாக பராமரிக்கவும் வேண்டாம்.
* வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவும், அன்பும் நிறைந்த மனம் ஒன்றே போதுமானது.
* முன்னேற வேண்டுமானால், சாஸ்திரங்களில் தேர்ச்சி பெறவோ, உடலை வருத்தி விரதம் இருக்கவோ வேண்டாம். கடவுளை நம்பினால் போதும்.
சொல்கிறார் ஷீரடி மகான்