sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

/

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்


ADDED : ஏப் 01, 2013 02:02 PM

Google News

ADDED : ஏப் 01, 2013 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னம்பிக்கையும், அடக்கமும் ஒரு மனிதனிடம் இருக்குமானால், அவனது வாழ்வு தித்திக்கும். அவனை யாராலும் வெல்ல முடியாது.

* நரகத்திற்குப் பயந்தோ, சொர்க்கத்தை விரும்பியோ தர்மச் செயல்களைச் செய்வது கூடாது. எந்த பலனும் எதிர்பாராமல் செய்ய வேண்டும்.

* அன்பு ஒருபோதும் எதையும் எதிர்பார்க்காது. பிறருக்கு கொடுப்பதில் தான் மகிழ்ச்சி கொள்ளும்.

* படைபலத்தால் கிடைக்கும் வெற்றியை விட, மனதில் இருக்கும் ஆசை, கோபம் ஆகிய இரண்டு உணர்ச்சிகளையும் வெல்வது மேலானது.

* அடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் தற்குறிக்குச் சமம். தலைமை ஏற்கும் தகுதி பெற விரும்புபவர்கள் முதலில் கற்க வேண்டிய பண்பு அடக்கம்.

* நம்முடன் எப்போதும் கடவுள் இருக்கும்போது, வாழ்வில் ரகசியம் என்பதே இருக்க முடியாது. நம் எண்ணத்தைக் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணருங்கள்.

* ஆயிரம் பெயர் சொல்லி அழைத்தாலும் உலகில் கடவுள் ஒருவரே இருக்கிறார். அவர் அன்பான மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

* தூய பக்தியுணர்வு மனதில் இருக்குமானால் துன்பம் கூட பேரின்பமாகத் தோன்றும்.

* உண்ணாநோன்பு, உடலோ<டு உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.

* அறிவை விட மேலானது உண்மை. உண்மையை நமது மதமாகப் போற்றுவோம். சிறு சிறு விஷயத்தில் கூட உண்மையாக இருப்பதே தூய வாழ்வின் அடிப்படை ரகசியம்.

* மனித எண்ணத்தை விட சக்தி படைத்தது உலகில் வேறில்லை.

* நாணயமாகச் சம்பாதித்தால் எந்த வேலையும் கவுரவக் குறைவானது அல்ல.

* உழைப்பவர் கையில் தான் இந்த உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பதால் உண்டாகும் முன்னேற்றம் நிலைத்து நிற்பதில்லை.

* உழைக்காத மனிதனுக்கு உண்பதற்குக் கூட உரிமை இல்லை.

* ஆரோக்கியத்தை விரும்பும் மனிதன் உழைப்பதற்குத் தயங்க மாட்டான்.

* உழைக்காமல் உணவு உண்ணும் மனிதர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.

* அறிவை விட ஒழுக்கம் உயர்வானது. ஒழுக்கமின்மை பல தீமைக்கு வழிவகுக்கும்.

* ஒழுக்கத்தை வெறும் படிப்பறிவால் பெற்று விட முடியாது.

* கைமாறு கருதாமல் பிறருக்கு நன்மை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒற்றுமைக்கு ஊறு விளைவதில்லை.

* நாம் செய்யும் ஒவ்வொரு நன்மை, தீமைக்கும் கடவுள் சரியான கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு இணையான கணக்குப் பிள்ளை வேறு யாருமில்லை.

* எதை மனிதன் விதைக்கிறானோ அதையே ஒருநாள் அறுக்கிறான் என்பது கடவுள் வகுத்த விதி. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

* குழந்தைப் பருவத்தில் உருவாகும் கருத்துக்கள், ஆழ்ந்த வேர் போல மனதில் பதிந்து விடுகின்றன.

* அநியாயத்தை எதிர்த்து நிற்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

* மனதிற்கு சாந்தி அளிப்பதற்காகவே இசை, நடனம் முதலிய கலைகள் உருவாக்கப்பட்டன.

சொல்கிறார் காந்திஜி






      Dinamalar
      Follow us