/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
மனதை ஒருமுகப்படுத்து மாணவனே! இதுவே வெற்றியின் ரகசியம்!
/
மனதை ஒருமுகப்படுத்து மாணவனே! இதுவே வெற்றியின் ரகசியம்!
மனதை ஒருமுகப்படுத்து மாணவனே! இதுவே வெற்றியின் ரகசியம்!
மனதை ஒருமுகப்படுத்து மாணவனே! இதுவே வெற்றியின் ரகசியம்!
ADDED : ஜூன் 08, 2016 12:12 PM

கல்வி நிறுவனங்கள் திறந்துள்ள நிலையில் இந்த அறிவுரையை மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள் மாணவர்களே!
* மன ஒருமைப்பாடே வெற்றியின் ரகசியம். இதை அறிந்தவர்களே புத்திசாலி மாணவர்கள். படிக்கும் அனைவரும் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் முழு கவனம் செலுத்துவது அவசியம்.
* இரும்பு பட்டறையில் சுத்தியல் அடிக்கும் கொல்லர் சிறிது கவனம் தவறினாலும் கையில் பட்டு விடும். கொல்லர்கள் மட்டுமல்ல... தச்சர், நெசவாளர், நாவிதர், எழுத்தாளர் என எந்த தொழிலில் ஈடுபடுபவர்களும் அவர்களது மனநிலையை எப்படி ஒருமைப்படுத்தி
வைத்துள்ளனரோ, அதே ஒருமை நிலையை மாணவர்களும் ஏற்க வேண்டும்.
* புத்தகத்தைப் படித்தோ, சொற்பொழிவைக் கேட்டோ யாரும் மன ஒருமைப்பாடு பெற முடியாது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஆழ்ந்த ஈடுபாடும், கவனமும் கொண்டால் தான் கல்வியில் கவனம் செலுத்த முடியும்.
* அர்ஜூனன், “மனதை கட்டுக்குள் வைப்பது என்பது காற்றைக் கையில் பிடிப்பதற்குச் சமமானதாக இருக்கிறதே” என்று கிருஷ்ணரிடம் கேட்கிறான். அதுபோல் அலைபாயும் மனதை உங்கள் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
* விடாமுயற்சியும், பயிற்சியும் இருந்தால் மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று கீதையில் கிருஷ்ணர் தெளிவுபடுத்தியுள்ளார்.
* புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியாது என ஒருபோதும் எண்ணுவது கூடாது. கடினமான பாடங்களைக் கூட கற்க முடியும் என்ற தன்னம்பிக்கைஉடன் படித்தால் சாதனை படைக்க முடியும்.
* இஷ்டம் போல் வாழ்ந்தால் என்ன என்றும், மனதை ஏன் கட்டுப்படுத்தி சிரமப்பட வேண்டும் என்று மாணவர்களில் சிலருக்கு அடிக்கடி
சந்தேகம் எழுவதுண்டு. இந்த நிலையை வளர்த்துக் கொண்டால், சாதாரண செயலை நிறைவேற்றக் கூட போராட வேண்டியிருக்கும்.
* மனக்கட்டுபாடு வந்து விட்டால் அரிய செயலைக் கூட எளிதாக நிறைவேற்ற முடியும்.
* மனதைக் கட்டுப்படுத்த விரும்புவோர் எண்ணங்களைச் சிதறடிக்கும் சூழ்நிலைகளை அறவே தவிர்க்க வேண்டும். புத்தியின் உதவியுடன் மனதை ஒரு பணியாளராக வழி நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
* ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் சுடர்விட்டு பிரகாசிக்கும் விளக்கு போன்றது. விளக்கு இருளை கிழித்து எங்கும் ஒளியைப் பரப்புவது போல, ஒருமுகப்பட்ட மனமும் தெளிவாக சிந்தித்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சலுடன் இருக்கும்.
* புத்தகத்தை வாசிப்பதால் மேலோட்டமான கருத்தை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். பாடத்தை ஆழ்ந்து படித்தால் மட்டுமே அதை மனதில் நிறுத்தி தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.
* சிறந்த மாணவராக திகழ வேண்டும் என்ற லட்சியத்துடன் கல்வியாண்டின் முதல்நாளில் இருந்தே படித்தால் இயல்பாக மன ஒருமைப்பாடு உண்டாகும்.
புரிய வைக்கிறார் புருஷோத்தமானந்தர்

