ADDED : ஜூலை 13, 2018 10:16 AM

ஜூலை 20 சாரதாதேவியார் நினைவு தினம்
* தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் உயர்ந்த மனிதர்கள்.
* சமயம் என்பது கடவுளைப் பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருப்பதல்ல. கடவுளில் வாழ்வதாகும்.
* உங்களுடைய குற்றங்களை எடுத்துக்காட்டும் மனிதர்களிடம் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
* உலகிலுள்ள அனைத்து சக்திகளிலும் அன்பே அதிக வலிமை படைத்தது.
* உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் உயிருக்கு பிரார்த்தனையும், தியானமும்.
* மன அமைதியை முழுமையாக கொண்டவர்களிடம் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும்.
* பணிவும், எளிய வாழ்வும் கொண்ட மனிதர் மெல்ல மெல்ல வானுலக தேவர்களில் ஒருவராக மாறுவதை உணரலாம்.
* செயலும் அதற்கான வினையும் சமமாக இருக்கும். எனவே யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதீர்கள்.
* இரக்கம், தன்னடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை, கற்பு, தவம் ஆகிய நற்குணங்கள் தான் ஆன்மிக வாழ்வின் முதுகெலும்பாகும்.
உற்சாகப்படுத்துகிறார் குருமாதா