தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நாளை நமதே!

நாளை நமதே!

நாளை நமதே!


ADDED : டிச 11, 2022 10:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2022 10:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராகு கேது என்றவுடன் நம் மனதில் பாம்பின் உருவம்தான் தோன்றும். இந்த நிழல் கிரகங்கள் நமது வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவர்களால் பித்ருக்களின் சாபம், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற தடைகள் ஏற்படுகின்றன. இதை சரி செய்ய ஒருவர் உங்களுக்காகவே காஞ்சிபுரத்தில் இருக்கிறார். அவர்தான் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள மாகாளேஸ்வரர்.

காளஹஸ்தியில் வாழ்ந்து வந்த மாகாளன் என்னும் பாம்பு, தனக்கு முக்தி வேண்டும் என்று சிவபெருமானிடம் முறையிட்டது. பின் அவரது கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு முக்தியும் அடைந்தது. இதுதான் இக்கோயிலின் வரலாறு.

வாருங்கள். கோயிலுக்குள் செல்வோம். உள்ளே நுழைந்ததும் சின்ன சின்ன சன்னதிகள் கண்களுக்கு தென்படும். இவற்றை கடந்து சென்றால் மாகாளேஸ்வரர் தரிசனம். சன்னதிக்கு சென்றவுடன் மனதில் நிம்மதி ஏற்படும். சிறிய விளக்கின் வெளிச்சத்தில் தெரியும் ஈசனை பார்த்தால் மனதின் வலி தெரியாது. அவரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும்.

சரி. பரிகாரத்தை பார்ப்போம். ராகு காலத்தில் இங்கு வந்து மாகாளேஸ்வரிடம் வேண்டுங்கள். பின் நெய் தீபத்தை ஏற்றி பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள். பிறகு பாருங்கள். உங்களது பிரச்னை எல்லாம் எப்படி காணாமல் போகிறது என்று. இக்கோயிலின் மற்றொரு சிறப்பு நவக்கிரகம். எல்லாக் கோயில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்களே முழுவதும் கோயிலாக உள்ளனர். ஆம்! மூலவரை சுற்றி நவக்கிரகங்களும் தனித்தனியாக தம்பதி சமேதராக காட்சி தருகின்றனர். தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.

ஒருமுறை சென்று பாருங்கள். சின்னஞ்சிறு குழந்தைகளின் மனம்போல் உங்கள் மனமும் மாறிவிடும். நாளை நமதே.. இந்த நாளும் நமதே... என்ற நம்பிக்கையும் தோன்றும்.

எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2.5 கி.மீ.,

விசஷே நாள்: பவுர்ணமி பிரதோஷம், அமாவாசை

ராகு காலம் (வெள்ளி - காலை 10:30 - 12:00 மணி, ஞாயிறு - மாலை 4:30 - 6:00 மணி) கார்த்திகை சோமவாரம்

நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி

தொடர்புக்கு: 0442 - 722 2049

அருகிலுள்ள தலம்: குமரக்கோட்டம் முருகன் கோயில் 3 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:00 - 11:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us