தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/விடை சொல்லும் திருவிடைமருதூர்

விடை சொல்லும் திருவிடைமருதூர்

விடை சொல்லும் திருவிடைமருதூர்


ADDED : டிச 11, 2022 10:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2022 10:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன் வினைப்பயன் காரணமாக இப்பிறவியில் துன்பமா... இத்துயரம் நீங்க வேண்டுமா நிம்மதியான வாழ்விற்கு தடையில்லாமல் விடை கிடைக்கும் வாங்க! திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு...

தஞ்சையை ஆண்ட வரகுண பாண்டியன் வேட்டையாட சென்ற போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த அந்தணர் மீது அவரின் குதிரை கால்கள் பட்டு இடறி இறந்து விட்டார். அதனால் பிரம்மஹத்தி தோஷம் அவரைத் தொற்றிக்கொண்டது. அதிலிருந்து விடுபட அவர் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்தார். சுவாமியோ அசரீரியாக ''மேற்கு வாயில் வழியாக செல்'' என ஆணையிட அதன்படி வந்த மன்னர் அத்தோஷம் நீங்கப்பெற்றார். (இன்றும் பக்தர்கள் சுவாமியை தரிசித்து மேற்கு வாயில் வழியாக வரும் வழக்கம் உள்ளது) கோயிலை இடித்தல், சுவாமி சிலைகளை திருடுதல், அந்தணர்களுக்கு துன்பம் இழைத்தல், பெண்னை ஏமாற்றுதல், போன்ற தவறுகளை செய்தோர் வருந்தி இத்தலத்து சுவாமியை வந்து வழிபட அவர்களது முன்வினைப்பாவம், பிரம்மஹத்தி தோஷம் நீங்குகிறது. இத்தலத்து சுவாமியின் திருநாமம் மகாலிங்க சுவாமி. அம்பாளின் திருநாமம் பிருஹத்சுந்தரகுசாம்பிகை. அம்பாள் சன்னதிக்கு அருகில் இருக்கும் மூகாம்பிகை சன்னதி கர்நாடகா கொல்லுாருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது.

சோழ நாட்டிலுள்ள திருவலஞ்சுழி விநாயகர், சுவாமிமலை முருகன், சேய்ஞசலுார் சண்டிகேஸ்வரர், சூரியனார்கோவில் சூரிய பகவான் முதலான நவக்கிரகங்கள், சிதம்பரம் நடராஜர், சீர்காழி பைரவர், திருவாவடுதுறை நந்தி ஆகிய பரிவாரத் தலங்களுக்கு மத்தியில் மூலமூர்த்தியாக மகாலிங்கசுவாமி அருள் பாலிக்கிறார். எனவே இது 'மூலலிங்க தலம்' என்பர். இது சந்திரனுக்குரிய தலமாக திகழ்வதால் மனம் தொடர்பான குறைகள்

யாவும் நிவர்த்தியாகும். இங்கு தான் இருபத்து ஏழு நட்சத்திரமும் நற்கதி பெற்றன. தேவார மூவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரிநாதர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயராலும் பாடல் பெற்ற தலம். சோழர்கள், பாண்டியர்கள் என பலரும் திருப்பணி செய்துள்ளனர்.

ஆயிரத்து இருநுாறு ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் உள்ள பிரகாரங்களை முறைப்படி வலம் வருவோருக்கு அசுவமேத யாகம் செய்தல், கைலாயத்தை வலம் வருதல்,முக்தி போன்ற பலன் கிடைக்கும். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் காருண்ய அமிர்த தீர்த்தம். தலவிருட்ஷம் மருதமரம்.

எப்படி செல்வது: கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ.,

விசேஷ நாள்: வைகாசி வசந்தஉற்ஸவம், ஆடிப்பூரம் புரட்டாசி நவராத்திரி, தைப்பூசம் மாசி சிவராத்திரி.

நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 97905 25781, 0435 - 2460 660

அருகிலுள்ள தலம்: திருவாவடுதுறை மாசிலாமணியீசர் கோயில் 10 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 04364 - 232 055

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us