ADDED : அக் 29, 2020 03:13 PM

அக்.26 - ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள்.
* எதிரி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை போதும்.
* கடவுள் விரும்பும் காணிக்கை இரண்டு; பொறுமை, நம்பிக்கை.
* கடவுளைத் தேடுவது ஒன்றே வாழ்வின் குறிக்கோள்.
* எல்லா உயிர்களிலும் கடவுள் நிறைந்திருக்கிறார்.
* தகுதி உள்ளவருக்கு மட்டுமே கடவுளின் தரிசனம் கிடைக்கும்.
* துன்பத்தில் இருந்து விடுபட மனதை கடவுளின் பக்கம் திருப்புங்கள்.
* கடவுளைத் தவிர வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.
* வழிபாட்டுக்கு ஆடம்பரம் கூடாது. பக்தி இருந்தால் போதும்.
* கடவுளைச் சரணடைந்து வாழ்வதே உண்மையான விரதம்.
* யாரிடமும் பகை வேண்டாம். அனைவருமே கடவுளின் பிள்ளைகள்.
* ஆணவம் இன்றி கடவுளின் வேலைக்காரனாக சேவையில் ஈடுபடுங்கள்.
* உலகம் பற்றிய கவலை வேண்டாம். உள்ளம் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம்.
* உண்மை எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம்.
* உடம்பை புறக்கணிப்பதோ, அதிகம் பராமரிப்பதோ கூடாது.
* பணம் எவ்வளவு இருந்தாலும், கர்ம வினையை அனுபவித்தாக வேண்டும்.
* பொறுமையைக் கைவிடாதீர். தாமதமானாலும் பலன் கிடைக்கும்.
* கடவுளிடம் சரணடைவதே உண்மையான கவுரவம்.
* பணியில் கவனம் செலுத்துங்கள். ஆழ்மனம் கடவுளை சிந்திக்கட்டும்.
* ரகசியம் எதுவும் கிடையாது. அனைத்தையும் கடவுள் அறிவார்.
* தர்மவழியை பின்பற்றினால் கடவுளின் அருளைப் பெற முடியும்.
* தேவையானதை பணிவுடன் கடவுளிடம் கேளுங்கள்; நிறைவேற்றுவார்.
* பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடக் கூடாது.
வேண்டுகிறார் ஷீரடி மகான்