
* கவுரவம் என்ற பெயரில் வழிதவறி நடக்காதீர். கடவுளுக்கு பணிவதே உண்மையான கவுரவம்.
* தற்பெருமை, அகங்காரம் இல்லாத இதயத்தில் கடவுள் வாழ்கிறார்.
* கடவுளை வழிபடும் கருவிகளாக மனமும், ஐம்புலன்களும் இருக்க வேண்டும்.
* பசித்தவருக்கு உணவு அளிப்பவரே சிறந்த கொடையாளி.
* மனத்துாய்மை கொண்டவர்கள் உலகில் யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
* தீமை செய்வோரைப் பழிவாங்க நினைக்காதீர். மாறாக நன்மை செய்யுங்கள்.
* மனிதன் பிறரைத் துன்புறுத்த நினைப்பது இயற்கைக்கு முரண்பட்ட செயல்.
* எல்லா உயிர்களையும் முக்கிய நோக்கத்திற்காகவே கடவுள் படைத்திருக்கிறார்.
* மனிதனை மனிதனாக வாழச் செய்யவே மகான்கள் மண்ணில் அவதரிக்கின்றனர்.
* இயற்கையின் ரகசியத்தை அறிய முடியாது. அதற்காக நேரத்தை வீணாக்காதீர்.
* உண்மையானது, உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே விவேகி.
* எளிமையாக வாழுங்கள். உணவு, உடையில் ஆடம்பரத்தை பின்பற்றாதீர்கள்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் மனம் கடவுளை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
* சவாரி செய்பவன் குதிரையைப் பராமரிப்பது போல உடம்பின் மீது அக்கறை காட்டுங்கள்.
* பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.
* பண உதவி கேட்பவரிடம் அன்பான நாலு வார்த்தையாவது பேசுங்கள்.
* ஏட்டுக் கல்வியால் பயனில்லை. சமுதாயத்திற்கு பயனுள்ளவனாக வாழ்வதே கல்வியின் பயன்.
சொல்கிறார் ஷீரடி பாபா