ADDED : நவ 28, 2017 04:02 PM

* இழந்த செல்வத்தை கூட சம்பாதித்து விட முடியும். ஆனால் இழந்து போன ஒரு நிமிட நேரத்தை சம்பாதிக்க முடியாது. காலம் பொன் போன்றது.
* கடல் அலைகளைக் கட்டுப்படுத்த கரை இருக்கிறது. அது போல மனதில் எழும் எண்ண அலைகளைக் கட்டுப்படுத்த விரதங்களை பெரியவர்கள் ஏற்படுத்தினர்.
* நம்பிக்கை இல்லாமல் வாழ்வில் வளர்ச்சி உண்டாகாது. விண்ணுலகில் இருக்கும் தெய்வத்தை நம்புவதை காட்டிலும் மனிதனுக்கு தன்னம்பிக்கை அவசியம்.
* உயிர்கள் மீது அன்பு செலுத்துங்கள். இதுவே உண்மையான வழிபாடு.
* இன்பம், துன்பம் எது வந்தாலும் கடவுளின் திருவடிகளை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள்.
* அன்பு மிக்க கடவுளே, தீமையை களைய கோர வடிவிலும் காட்சியளிக்கிறார். இரண்யகசிபுவிடம் சீறிப் பாய்ந்த நரசிம்ம மூர்த்தியே, பக்த பிரகலாதனை கண்டதும் சாந்தம் அடைந்தார்.
* சுயநலமும் ஆணவமும் உள்ளவர்கள் கடவுளை நெருங்கவே முடியாது. எளிமையும், துாய்மையும் மிக்கவர்கள் மனம் ஒன்றி வழிபடும் போது கடவுளின் அருளுக்கு பாத்திரமாகி விடுவர்.
* எல்லாம் கடவுள் செயல் என்று கூறிக் கொண்டு சும்மா இருப்பவர்கள் சோம்பேறிகள். கடவுள் அளித்த அறிவு, செல்வத்தை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.
விளக்குகிறார் அமிர்தானந்தமயி