
* அமைதியை விட மேலான மகிழ்ச்சி இல்லை.
* ஆசையை ஒழித்தால் துன்பம் இல்லாமல் வாழலாம்.
* பொறுமை காப்பதே சிறந்த பிரார்த்தனை.
* உண்மை ஒன்றே என்றும் நிலைத்திருக்கும்.
* 'தான்' என்னும் முனைப்பு மறைந்தால் நிம்மதி கிடைக்கும்.
* எளிய உயிர்களை பலியிடுவது பெரும் பாவம்.
* தர்மத்தை மீறினால் துன்பத்தில் இருந்து தப்ப முடியாது.
* ஆயிரம் வீரர்களை வென்றவனை விட மனதை வென்றவன் மேலானவன்.
* விடுதலைக்கான வழி மற்றவர் வசமில்லை; உங்களிடமே உள்ளது.
* மாட மாளிகைகள் துயரங்களின் இருப்பிடம்.
* தீய எண்ணங்களான காமம், கோபத்தை விரட்டுங்கள்.
* நற்செயல்களை தள்ளிப் போடாதீர்கள்.
* அனைவரையும் நேசித்தால் மகிழ்ச்சி வரும்.
* தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
* எண்ணம், சொல், செயலால் தர்மத்தை பின்பற்றுங்கள்.
* உடன் பிறந்தோரிடம் அன்பு காட்டுங்கள். உதவிக்கரம் நீட்டுங்கள்.
* பஞ்சில் பற்றும் நெருப்பை விட, வெறுப்பு விரைவாக பரவும்.
தெளிவுபடுத்துகிறார் புத்தர்