ADDED : ஜன 17, 2021 06:12 PM

* பழம் போல இனிய சொல் இருக்க காய் போல கடுஞ்சொல் எதற்கு?
* கல்வியின் நோக்கம் கடவுளின் திருவடிகளை வணங்குவதே.
* பணிவும், இனிய சொல்லும் கொண்டவருக்கு வேறு ஆபரணம் தேவையில்லை.
* ஒருவர் செய்த உதவியை மறக்காதீர்கள். பிறர் செய்த கெடுதலை மறந்து விடுங்கள்.
* மனிதனுக்கு சிறப்பைத் தருவது ஒழுக்கமே. அதை உயிரினும் மேலாக போற்றுங்கள்.
* ஊருக்கு நடுவில் உள்ள பழுத்த மரம் போல நல்லவரின் செல்வம் பலருக்கும் பயன்படும்.
* நாளை பார்க்கலாம் என்று, நல்ல செயல்களை தள்ளி வைக்காதீர்.
* நல்ல மனைவி அமைந்தால் நல்வாழ்வு கிடைத்தது போலாகும்.
* யாருக்கும் தீங்கு தராத சொற்களைப் பேசுவதே உண்மை.
* சோர்வுக்கு இடம் தராமல் உழைத்தால் வெற்றி கிடைக்கும்.
* ஊக்கமுடன் உழைத்தால் அதற்கான பலன் கிடைப்பது உறுதி.
* தாயின் பசி போக்குவதற்காகக் கூட தீய செயல்களில் ஈடுபடாதீர்.
* மனதில் உறுதி இருந்தால், நினைத்ததை அடையலாம்.
* நல்ல நுால்களை படியுங்கள். நல்லவர்களிடம் நட்பு கொள்ளுங்கள்.
* ஒருவரிடம் பணம் இருந்தால் மட்டும் போதாது. குணம் அவசியம்.
திருந்தச் சொல்கிறார் திருவள்ளுவர்