
* நெருக்கடி நேரத்தில் நிதானம், பொறுமையை இழக்காதீர்.
* உங்களுக்கு விதிக்கப்பட்டது தான் நடக்கும். அதை மாற்ற முடியாது.
* கண்ணுக்கு தெரியாவிட்டாலும் கடவுளின் அருளே நம்மை வழிநடத்துகிறது.
* தியானத்தால் மனம் பக்குவம் பெறும். வாழ்க்கை சிறக்கும்.
* அன்புடன் தரும் எளிய காணிக்கையைக் கூட கடவுள் ஏற்பார்.
* மனம் என்னும் வீட்டில் இருந்து நம்மை இயக்குபவர் கடவுளே.
* எதிர்பார்ப்பு இன்றி செய்யும் தர்மமே உற்ற துணை.
* மனநிறைவுடன் செயல்படும் போது உடலின் துன்பம் பெரிதாக தோன்றாது.
* ஆன்மிகத்தில் வளர்ச்சி பெற ஒழுக்கமும், நற்பண்புகளும் அவசியம்.
* வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது.
* விரதம் இருப்பதால் உடலும், மனமும் புத்துணர்வு பெறுகிறது.
* எல்லா உயிர்களிலும் கடவுளைக் காண்பவனே உண்மையான பக்தன்.
* புராணங்களின் மூலம் ஆன்மிகம் எளிய மனிதர்களையும் சென்றடைகிறது.
அறிவுறுத்துகிறார் சின்மயானந்தர்