ADDED : செப் 15, 2017 01:48 PM

* உண்மை என்னும் ஆயுதத்தை ஏந்திக் கொள்ளுங்கள். அதை விட சிறந்த பாதுகாப்பு வேறில்லை. வெற்றிக்கான திறவு கோல் அதுவே.
* நேர்மையால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுங்கள். தூய்மையான மனதுடன் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
* மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான். சுதந்திரமாக வாழ்வதும், அடிமைப்பட்டு கிடப்பதும் அவரவர் மனதைப் பொறுத்தது.
* மற்றவர்கள் உதவுவதை காட்டிலும், மனிதனுக்கு அவனது மனமே அதிகமாக உதவி செய்கிறது. எண்ணத்தை சீர்படுத்தினால் உயர்ந்த நிலையை எளிதாக அடைய முடியும்.
* எண்ணத்தைக் கட்டுப்படுத்தி, லட்சியத்தை நோக்கி செல்பவன் வாழ்வில் வளர்ச்சி அடைகிறான். கட்டுப்படுத்த தவறியவன் தாழ்ந்த நிலைக்கு ஆளாகிறான்.
* வெற்றிக்களிப்பில் இருக்கும் போது, “எல்லாவற்றையும் எனக்கு அளித்த ஆதிசக்தியே! நான்என்னும் அகங்காரம் உண்டாகாமல் காப்பாயாக” என்று
கடவுளை வேண்டுங்கள்.
* ஆக்கப்பூர்வமான, உற்சாகம் தரும் நல்ல விஷயங்களை பேசுங்கள் அல்லது கேளுங்கள். இல்லாவிட்டால் மவுனத்தில் ஆழ்ந்திருங்கள்.
தருகிறார் பரமானந்தர்