ADDED : செப் 15, 2017 01:48 PM

* இளம் மூங்கில் சுலபமாக வளையும். முற்றிய மூங்கில் வளைத்தால் ஒடிந்து விடும். இளமை காலமே பக்தியில் ஈடுபடுவதற்கான இனிய காலம்.
* வெளியுலகில் கடவுளைத் தேடுபவன் அறியாமையில் கிடக்கிறான். தனக்குள்ளேயே கடவுள் இருப்பதை அறிபவனே அறிவில் சிறந்தவன்.
* ஆணவம் எளிதில் நம்மை விட்டு போவதில்லை. உடல் என்பது இருக்கும் வரை அதன் அடையாளம் சிறிதளவாவது இருக்கவே செய்யும்.
* தண்ணீரில் இட்ட கோடு போல, வந்த வேகத்தில் கோபத்தை மறந்து விட வேண்டும். அதுவும் பிறர் நலனுக்காக கோபம் வெளிப்பட வேண்டும்.
* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கு எதுவுமே இல்லை. கடவுளை முழுமையாக நம்பி விட்ட பிறகு யாரையும்
நம்பத் தேவையில்லை.
* தன்னை மட்டும் திறமைசாலியாக கருதுவது மூடத்தனம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கவே செய்யும்.
* விடாமுயற்சியுடன் மனதை அடக்கியவர்களால் மட்டுமே, தனிமையிலும், கூட்டத்திலும் கடவுளை சிந்திக்க முடியும்.
* உண்மையை உணர்த்தும் சாஸ்திர நூல்களை படிப்பதை விட கேட்பது நல்லது. அனுபவத்தின் வாயிலாக உண்மையை அறிவது இன்னும் நல்லது.
சொல்கிறார் ராமகிருஷ்ணர்