ADDED : ஜூன் 19, 2020 07:52 PM

* கலியுகத்தில் கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
* தர்மம் இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். கடவுள் இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும்.
* லட்சியத்தை அடைய எண்ணம், சொல், செயலைக் கட்டுபடுத்துவது அவசியம்.
* பேராசை வளரத் தொடங்கினால் அறிவாளியாக இருப்பவனும் முட்டாள் ஆகி விடுவான்.
* புலன்களின் கவர்ச்சியானது நல்ல அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்துவிடும்.
* தர்மத்தில் நம்பிக்கை ஏற்படாவிட்டால் மற்ற எதிலும் நம்பிக்கையும், பிடிப்பும் ஏற்படாது.
* தர்மத்தை முழுமையாக ஏற்று பின்பற்றுவதே கல்வி கற்றதன்அடையாளம்.
* வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க உதவும் தோணி தர்மம் ஒன்றே.
* தர்ம வழியில் பணம் சம்பாதித்து அதைக் கொண்டு வேதம் விதித்தபடி வாழ்வு நடத்துங்கள்.
* தேவையற்ற பேச்சால் நேரம் வீணாவதோடு திட்டமிட்ட செயல்களை நிறைவேற்ற முடியாது.
விளக்கம் தருகிறார் வியாசர்