sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உண்மையான தர்மம் எது

/

உண்மையான தர்மம் எது

உண்மையான தர்மம் எது

உண்மையான தர்மம் எது


ADDED : மார் 11, 2021 06:03 PM

Google News

ADDED : மார் 11, 2021 06:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அடிப்படை வசதி கூட இல்லாத ஏழைகளுக்கு உதவுவதே உண்மையான தர்மம்.

* எமன் நம் தலைமுடியை பிடித்திழுக்கிறான் என்பதை உணர்ந்து இன்றே தர்மம் செய்யுங்கள்.

* தேவைகளை குறைத்துக் கொண்டு முடிந்தளவு தர்மம் செய்யுங்கள்.

* பலனை எதிர்பார்க்காமல் செய்யும் தர்மத்தின் பலனை கடவுள் அளிப்பார்.

* புகழுக்காக சேவையில் ஈடுபடாதீர். இல்லாவிட்டால் அகந்தை வளரும்.

* தினமும் கையளவு புல்லாவது பசுவுக்கு கொடுக்க வேண்டும்.

* சேவை செய்பவர்கள் புன்சிரிப்பு, சாந்தம், தைரியம், ஊக்கமுடன் இருப்பது அவசியம்.

* பிறவியின் பயன் பிறரிடம் அன்பு செலுத்துவது மட்டுமே.

* வீடு சுத்தமாக இருந்தால் போதாது, மனமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

* வியாதிக்கு மருந்து மாதிரி பசிக்கு உணவு அளவாக இருக்க வேண்டும்.

* பசி போக்கத் தான் உணவே தவிர ருசியை அனுபவிக்க அல்ல.

* பிறரை தாக்குவதாக நினைத்தாலும் கோபம் நம்மையே அதிகம் தாக்குகிறது.

* பாவ சிந்தனைகளை அகற்ற புண்ணிய சிந்தனைகளை மனதில் உருவாக்க வேண்டும்.

* பித்ரு காரியங்களுக்கு சிரத்தையும், தெய்வ செயல்களுக்கு பக்தியும் அவசியம்.

* சுயநலத்தால் வரும் இன்பம் தற்காலிகமானது. பிறருக்கு கொடுத்து மகிழ்வதே பேரின்பம்.

விளக்குகிறார் காஞ்சி மகாபெரியவர்






      Dinamalar
      Follow us