sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம்

/

உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம்

உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம்

உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம்


ADDED : மார் 11, 2021 06:04 PM

Google News

ADDED : மார் 11, 2021 06:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை ஆக்கவே வந்திருக்கிறோம்.

* துணிவுடன் முன்னேறுங்கள். தற்போதைய நிலை குறித்து சிந்திக்காதீர்கள்.

* லட்சியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு கடமையில் ஈடுபடுங்கள்.

* முழுப்பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு பணியாற்றுங்கள்.

* அரிய செயல்கள் நிறைவேற உழைப்பு, விடாமுயற்சியும் அவசியம்.

* எதை மண்ணில் விதைத்தோமோ அதையே அறுவடை செய்ய முடியும். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம்.

* செயலில் மட்டுமில்லாமல் மனதாலும் நல்லதை சிந்தியுங்கள்.

* முகத்தில் புன்னகையும், பேச்சில் இனிமையும் கொண்டிருங்கள்.

* குழந்தையின் கள்ளம் கபடமற்ற தன்மையோடு செயலாற்றுங்கள்.

* நாய்க்கு ஒரு பிடி சோறிட்டாலும், அந்த நாயைக் கடவுளாக எண்ணி வழிபடுங்கள்.

* நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள். கற்றதை மனதில் அடிக்கடி சிந்தியுங்கள்.

* தன்னை நம்பாதவன் கடவுள் மீது பக்தி செலுத்தாத நாத்திகன் போன்றவன்.

* மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே மாறி விடும் சக்தி படைத்தவன்.

* 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்ற மனஉறுதி இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.

* பிறருக்குச் செய்யும் எளிய சேவை கூட உங்களுக்கு பேராற்றலை உண்டாக்கும்.

சொல்கிறார் விவேகானந்தர்






      Dinamalar
      Follow us