
* நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவியே மனிதன்.
* 'நான் யார்' என்பதை அறிந்து கொள்ள தவம், தியானம் மனிதனுக்கு துணைசெய்கிறது.
* கடவுளை வெளியில் தேடாமல் இதயத்தில் தேடுங்கள். இதயத்தில் கருணை இருந்தால் நிச்சயம் அவரும் இருப்பார்.
* கடவுளை அடைவதற்கு குறுக்கு வழி கிடையாது. நேர்மை ஒன்றே வழி.
* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உயர்ந்த உபதேசமும் ஆகும்.
* வாயை மட்டும் மூடிக் கொண்டு மனதை அலைபாய விட்டால் அது மவுனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
* மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே ஆன்மிக வாழ்வின் நோக்கமாகும்.
* கடவுள் பெயரை மந்திரம் போல சொல்வதால் மனம் அடங்கும்.
* மனிதன் சுயமாக இயங்க முடியாததற்கு காரணம் வலிமையற்ற மனமே.
* குறை எப்போதும் வெளியில் இருப்பதில்லை. அது எப்போதும் மனதில் தான் இருக்கிறது.
* அகந்தையை துறப்பவனே கடவுளின் அருள் பெற தகுதியானவன்.
விடை சொல்கிறார் ரமணர்