sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நரசிம்மர் இருக்க நமக்கென்ன கவலை?

/

நரசிம்மர் இருக்க நமக்கென்ன கவலை?

நரசிம்மர் இருக்க நமக்கென்ன கவலை?

நரசிம்மர் இருக்க நமக்கென்ன கவலை?


ADDED : ஜன 16, 2020 05:33 PM

Google News

ADDED : ஜன 16, 2020 05:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி

ஓம் திருமாமகள் கேள்வா போற்றி

ஓம் யோக நரசிங்கா போற்றி

ஓம் ஆழியங்கையா போற்றி

ஓம் அக்காரக் கனியே போற்றி

ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி

ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி

ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி

ஓம் சங்கரப்ரியனே போற்றி

ஓம் சார்ங்க விற்கையா போற்றி

ஓம் உலகமுண்ட வாயா போற்றி

ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி

ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி

ஓம் அனைத்துலக முடையாய் போற்றி

ஓம் தாமரைக் கண்ணா போற்றி

ஓம் காமனைப் பயந்தாய் போற்றி

ஓம் ஊழி முதல்வா போற்றி

ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி

ஓம் ராவணாந்தகனே போற்றி

ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

ஓம் பெற்ற மாளியே போற்றி

ஓம் பேரில் மணாளா போற்றி

ஓம் செல்வ நாரணா போற்றி

ஓம் திருக்குறளா போற்றி

ஓம் இளங்குமார போற்றி

ஓம் விளக்கொளியே போற்றி

ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி

ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி

ஓம் எங்கள் பெருமான் போற்றி

ஓம் இமையோர் தலைவா போற்றி

ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி

ஓம் வேதியர் வாழ்வே போற்றி

ஓம் வேங்கடத்துறைவா போற்றி

ஓம் நந்தா விளக்கே போற்றி

ஓம் நால் தோளமுதே போற்றி

ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி

ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி

ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி

ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி

ஓம் மூவா முதல்வா போற்றி

ஓம் தேவாதி தேவா போற்றி

ஓம் எட்டெழுத்திறைவா போற்றி

ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி

ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி

ஓம் வட திருவரங்கா போற்றி

ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி

ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி

ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி

ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

ஓம் மாலே போற்றி

ஓம் மாயப் பெருமானே போற்றி

ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி

ஓம் அருள்மாரி புகழே போற்றி

ஓம் விண் மீதிருப்பாய் போற்றி

ஓம் மண்மீது உழல்வோய் போற்றி

ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி

ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி

ஓம் முந்நீர் வண்ணா போற்றி

ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி

ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி

ஓம் அனைத்துலக முடையாய் போற்றி

ஓம் அரவிந்த லோசன போற்றி

ஓம் மந்திரப் பொருளே போற்றி

ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி

ஓம் குரு பரம்பரை முதலே போற்றி

ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி

ஓம் பின்னை மணாளா போற்றி

ஓம் என்னையாளுடையாய் போற்றி

ஓம் நலம்தரும் சொல்லே போற்றி

ஓம் நாரண நம்பி போற்றி

ஓம் பிரகலாதப்ரியனே போற்றி

ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி

ஓம் பேயார் கண்ட திருவே போற்றி

ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி

ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி

ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி

ஓம் கல்மாரி காத்தாய் போற்றி

ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

ஓம் வில்லியறுத்த தேவா போற்றி

ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி

ஓம் இனியாய் போற்றி

ஓம் இனிய பெயரினாய் போற்றி

ஓம் புனலரங்கா போற்றி

ஓம் அனலுருவே போற்றி

ஓம் புண்ணியா போற்றி

ஓம் புராணா போற்றி

ஓம் கோவிந்தா போற்றி

ஓம் கோளரியே போற்றி

ஓம் சிந்தாமணி போற்றி

ஓம் சிரீதரா போற்றி

ஓம் மருந்தே போற்றி

ஓம் மாமணி வண்ணா போற்றி

ஓம் பொன் மலையாய் போற்றி

ஓம் பொன் வடிவே போற்றி

ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி

ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி

ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி

ஓம் தயரதன் வாழ்வே போற்றி

ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி

ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி

ஓம் வள்ளலே போற்றி

ஓம் வரமருள்வாய் போற்றி

ஓம் சுதாவல்லி நாதனே போற்றி

ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி

ஓம் பத்தராவியே போற்றி

ஓம் பக்தோசிதனே போற்றி






      Dinamalar
      Follow us