sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்!

/

நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்!

நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்!

நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்!


ADDED : நவ 19, 2012 12:51 PM

Google News

ADDED : நவ 19, 2012 12:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா 1926, நவம்பர் 23ல் அவ தரித்தார். அவருக்கு, 87வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

சாய்பாபா பிறந்த ஊர் ஆந்திராவிலுள்ளபுட்டபர்த்தி. ஒரு காலத்தில் 'கொல்லப்பள்ளி' எனப்பட்டது.

'பசுக்கூட்டம் நிறைந்த ஊர்' என்பது இதன் பொருள். பசு ஒன்று பாம்புப்புற்றில் பால் சொரிந்ததன் காரணமாக, பாம்பை மாடு மேய்க்கும் ஒருவர் கொன்றார். அதன்பின் அவ்வூர் முழுக்க பாம்பு புற்றுகள் தோன்றின. எனவே கொல்லப்பள்ளி என்ற பெயர் 'புட்டவர்த்தினி' என்றானது. இதற்கு புற்றுகள் நிறைந்த இடம் என்று பெயர். காலப்போக்கில், இது புட்டபர்த்தி ஆனது.

இங்கு வசித்த வெங்கப்பராஜு- ஈஸ்வரம்மா தம்பதியின் புத்திரரே சத்ய சாய்பாபா. கிருஷ்ணர் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தது போல, பாபா ஈஸ்வரம்மாவின் எட்டாவது குழந்தையாக, அக்ஷயவருஷம், கார்த்திகை சோமவாரம் (திங்கள்கிழமை), திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இது சிவனுக்கு உகந்த நாள். அவரது இடது கன்னம் மற்றும் மார்பில்

மச்சங்கள் இருந்தன. பாதங்களில் விஷ்ணுவிற்குரிய சங்கு, சக்கர ரேகைகள் ஓடின. பிள்ளைக்கு சத்யநாராயணன் என்று பெயரிட்டனர். பாபாவின் தாத்தா கொண்டமராஜு சத்யாவை எப்போதும் பூஜை அறையிலேயே வைத்துக் கொள்வார். அங்கு வசித்த கிராம அதிகாரியின் மனைவி சுப்பம்மா, பாபாவைத் தன் பிள்ளையாக கருதி அன்பு காட்டினார். கண்ணனை வளர்த்த யசோதை போல் விளங்கினார்.

பாபா கருணை மிக்கவர். யாராவது பசி என்று வந்தால், <உணவு வழங்குவார் குளிரால் வாடுபவர்களுக்கு துணிமணி வழங்கி மகிழ்வார். பசு,காளைகளை இம்சை செய்தால் சத்யாவின் மனம் படாத பாடுபடும். முதலில் புட்டபர்த்தியில்

பள்ளிப்படிப்பைத் தொடங்கிய பாபா, பின்னர் புக்கபட்டணத்திற்குச் சென்றார். தன் பள்ளித்தோழர்கள் விரும்பும் பொருள்களை வரவழைத்துக் கொடுத்தார்.

பாபாவின் தாய் கல்வி, குடிநீர் மற்றும் மருத்துவ வசதியின்றி தவிக்கும் மக்களுக்காக இரக்கப்படுவார். அவர்களுக்கு இந்த அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என தன் மகனுக்கு அறிவுரை வழங்கினார். தாயின் விருப்பத்திற்கேற்ப மருத்துவமனை, குடிநீர், கல்வி உள்ளிட்ட சேவைகளை இலவசமாக வழங்கினார்.

புட்டபர்த்தியில் அவர் அமைத்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்வதேச தரம் கொண்டது.

ஏழைகளுக்கு இருதயநோய் ஆபரேஷன் இலவசமாக நடப்பது இதன் ஸ்பெஷாலிட்டி. ஆந்திரா மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம், சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் என என்றும் அழியாத பணிகளைச் செய்தார். ஏப்ரல்24, 2011ல் ஸித்தியடைந்த, பகவான் பாபா அனைவர் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.






      Dinamalar
      Follow us