sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாதம் ஒரு மந்திரம்

/

மாதம் ஒரு மந்திரம்

மாதம் ஒரு மந்திரம்

மாதம் ஒரு மந்திரம்


ADDED : அக் 14, 2016 04:23 PM

Google News

ADDED : அக் 14, 2016 04:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாளுக்குரிய மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. இவற்றை பக்திப்பூர்வமாகச் சொல்லும் போது நமக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் தினமும் 108, 504, 1008 என்ற எண்ணிக்கையில் எது முடியுமோ அந்த எண்ணிக்கையில் இந்த மந்திரங்களைச் சொல்லுங்கள். இதனால் அளவில்லாத செல்வம், ஆரோக்கியம், நல்ல குடும்பம், தன தானியம், கவுரவம், சுகப்பிரசவம், புத்திர பாக்கியம் உண்டாகும். மேலும் அஸ்வமேத யாகம் உள்ளிட்ட பல யாகங்கள் செய்த பலனும் கிடைக்கும். இதை வியாச மகரிஷி கூறியுள்ளதாக ஸ்ரீமகாலட்சுமி சமேத ஸ்ரீகேசவ அஷ்டோத்ர சத நாமாவளியில் சொல்லப்பட்டுள்ளது. புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி நமக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இது.

இந்த மந்திரங்கள் பெருமாளுக்கு உரியவை. இதைச் சொல்லும் போது பெருமாள் படத்திற்கு துளசி மாலை அணிவித்து, முந்திரி, கல்கண்டு, பால், பழம், தண்ணீர் நைவேத்யம் செய்வது நல்லது. வெளியூர் செல்லும் சமயங்களில், பயணத்தின் போதே மந்திரங்களைச் சொல்லலாம். இந்த பிறவியில் நமது குடும்பத்துக்கு மட்டுமல்லாது, எதிர்கால தலைமுறைக்கும் இந்த மந்திரங்கள் நல்ல பலன் தரும்.

புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று இந்த மந்திரங்களை சொல்லும் வழக்கத்தை ஆரம்பிப்போம்.

மாதம் - மந்திரம் - பலன்

சித்திரை - ஓம் விஷ்ணுவே நம, ஓம் புருஷோத்தமாய நம - பவுண்டரீக யாகம்

வைகாசி - ஓம் மதுசூதனாய நம, ஓம் அதோக்ஷகாய நம - அக்னிஷடோம யாகம்

ஆனி - ஓம் திரிவிக்ரமாய நம, ஓம் லட்சுமி நரசிம்ஹாய நம - கோவரத யாகம்

ஆடி - ஓம் வாமனாய நம, ஓம் அச்சுதாய நம - நரமேத யாகம்

ஆவணி - ஓம் ஸ்ரீதராய நம, ஓம் ஜனார்த்தனாய நம - பஞ்சமகா யாகம்

புரட்டாசி - ஓம் ஹ்ருஷிகேசாய நம, ஓம் உபேந்திராய நம - சவுத்ராமணி யாகம்

ஐப்பசி - ஓம் பத்மனாபாய நம, ஓம் ஹரனேய நம - 1008 பசுதான பலன்

கார்த்திகை - ஓம் தாமோதராய நம, ஓம் கிருஷ்ணாய நம - மகாகோமேத யாகம்

மார்கழி - ஓம் கேசவாய நம, ஓம் ஸங்கர்ஷணாய நம - அஸ்வமேத யாகம்

தை - ஓம் நாராயணாய நம, ஓம் வாசுதேவாய நம - வாஜபேய யாகம்

மாசி - ஓம் மாதவாய நம,ஓம் பிரத்யும்னாய நம - ராஜசூய யாகம்

பங்குனி - ஓம் கோவிந்தாய நம, ஓம் அதிருத்ராய நம, - அதிருத்ர யாகம்.






      Dinamalar
      Follow us