ADDED : ஆக 23, 2022 09:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணருக்கு பிரசாதமாக நாவற்பழங்கள் படைக்கப்படும். எதற்காக இப்படி செய்கிறோம்?
ஒரு முறை கோகுலத்தின் வீதியில் மூதாட்டி நாவற்பழம் விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு பிடி நாவற்பழத்திற்கு ஈடாக ஒரு பிடி அரிசியை வாங்கிக் கொள்வாள். அங்கு தவழ்ந்து வந்தான் கிருஷ்ணன். வருவதற்குள் அவன் கொண்டு வந்த அரிசி கீழே சிந்தி விட்டது. கையில் ஒன்றுமே இல்லை. பாவமாய் பார்த்தான் அவன். பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைநிறைய பழங்களை கொடுத்து விட்டு வீடு திரும்பினார் மூதாட்டி. அவர் அன்று சேகரித்த அரிசியை எடுக்க கூடையைத் திறந்தார். அப்போது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கூடை முழுவதும் நகை, பொற்காசுகள் நிரம்பியிருந்தன. அவனது கருணையை நினைத்து நெக்குருகி நின்றார்.

