நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹரே கிருஷ்ணா என்பது திருமாலடியார்களால் உச்சரிக்கப்படும் மந்திரம். இது பதினாறு வார்த்தைகளைக் கொண்டது. கலி-சந்தரனா உபநிடதத்தில் இது பற்றிய குறிப்பு உள்ளது. இதனை மகா மந்திரம் எனவும் அழைப்பர்.
மந்திரம்
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ராம, கிருஷ்ண என்ற வார்த்தை கடவுளை குறிக்கும். ஹரே என்ற வார்த்தை அவரின் ஆற்றலைக் குறிக்கும். இதன் பொருள் மிக மேலான ஆனந்தம் என்பர். அவரை அடைய இந்த மகா மந்திரம் உதவுகிறது என்பது ஞானிகள் கண்ட உண்மை.

