ADDED : ஏப் 22, 2021 04:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டாபிஷேகத்திற்கு முதல்நாள் அயோத்தியிலுள்ள ரங்கநாதரை தரிசிக்க ராமனும், சீதையும் சென்றனர். அதாவது, தன்னைத் தானே வணங்கச் செல்கிறான் ராமன்.
'அர்ச்சகனும் அவனே, அர்ச்சிக்கப்படுபவனும் அவனே' என்கிற அபூர்வ நிலை. மனிதனாக பிறந்து விட்டதால், இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறான்.
யாருக்கும் கிடைக்காத அந்த பாக்கியம் தனக்கு கிடைத்தாக மகிழ்ந்த சீதை, அதை இமை கொட்டாமல், விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதன் காரணமாக, சீதையை 'விசாலாக்ஷ்யா' என அழைக்கிறார் வால்மீகி. விசாலமான கண்களை உடையவள் என்பது இதன் பொருள்.