
ராம நாம கீர்த்தனை செய்வதற்காக 1931 முதல் கேரளா காஞ்சன்காட்டில் ஆனந்த ஆஸ்ரமம் செயல்படுகிறது.
இங்கு காலை 6:00 - மாலை 6:00 மணி வரை அரை மணி நேரம் பெண்களும், அடுத்த அரை மணி நேரம் ஆண்களுமாக மாறி மாறி கீர்த்தனை செய்வர். இதில் பங்கு பெற முன்பதிவு அவசியம். பக்தர்களுக்கு தங்கும் அறை, உணவு இலவசம். தனியாகவோ, தம்பதியாகவோ, நண்பருடனோ அதிகபட்சமாக மூன்று நாள் தங்கலாம். இப்பகுதி எங்கும் கோடிக்கணக்கான நாம ஜபங்களின் சக்தி காற்றில் பரவியுள்ளது.
இங்கு வந்தால் மன உளைச்சல், கவலை, உறுதியின்மை குணமாகும். நிம்மதியின்றி தவிப்போர் ஒருமுறை வந்தாலும் பலன் கிடைக்கும்.
இந்த ஆஸ்ரமத்தை தொடங்கியவர் வீரசிவாஜியின் குரு சமர்த்த ராமதாஸரின் வம்சாவளியைச் சேர்ந்தவர். இல்லத் துறவியான இவர், நாடெங்கும் நடந்தே பயணித்தார். ராம நாம கீர்த்தனையை தந்தையிடம் இருந்து பெற்றார். தன் வாழ்நாளில் சில கோடி முறை ராமநாமம் ஜபித்தார். இவருக்கு நயன தீட்சை வழங்கிய குரு ரமணமகரிஷி.
இவரது சீடராக இருந்தவர் தான் விசிறிச் சாமியார் என்னும் யோகிராம் சுரத்குமார். மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள இங்கு உலககெங்கும் இருந்து ராம பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இங்கு ஜபிக்கும் ராம நாம கீர்த்தனை -
ஓம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா
முகவரி: ஆனந்த ஆஸ்ரமம், ஆனந்த ஆஸ்ரமம் போஸ்ட், காஞ்சன்காடு,
கேரளா - 671 531
இணையதளம்: http://www.anandashram.org