ADDED : ஜூலை 31, 2021 03:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிகை எல்லையற்ற சக்தி கொண்டவள். அவள் ஆயிரம் கண்கள் கொண்டவள் என்பதால் ஆயிரம் கண்ணுடையாள் எனப்படுகிறாள். அவள் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் கோயில் கொண்ட அவளுக்கு லலிதா சகஸ்ர நாமத்தில் ஆயிரம் திருநாமங்கள் உள்ளன. இவற்றை ஆடிவெள்ளியன்று படிப்பது சிறப்பு. ஆடியை ஆகாத மாதம், சூன்யமாதம் என சிலர் தவறாக கருதுகின்றனர். ஆனால் அம்மனுக்கு பிடித்த மாதம் ஆடி. இதனை வழிபாட்டுக்குரிய மாதம் என முன்னோர்கள் ஏற்படுத்தியதால் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை.