ADDED : மார் 03, 2017 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என பாண்டவர் ஐவர். இவர்களின் மனைவி திரவுபதி. ஐவருக்கு ஒரு மனைவியா என்பதற்குரிய விளக்கத்தை சின்மயானந்தர் சொல்கிறார். கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்னும் ஐந்து புலன்களே பாண்டவர்கள். இவற்றை இயக்கும் மனமே திரவுபதி. மனம் என்னும் கருவியுடன் கண் இணைந்து, உலகைக் கண்டு மகிழ்கிறது. அப்போது மற்ற நான்கு உறுப்புகளும் மனதுடன் இணைந்தே வேலை செய்கின்றன. இதனால் மனம் தூய்மையை இழப்பதில்லை. இந்த தத்துவத்தை உணர வைக்கவே ஒரு புராண வரலாற்றைச் சொன்னார்கள்.

