ADDED : ஜூலை 29, 2016 10:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் அன்ன வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். அன்னத்தின் மீது அமர்ந்த மாரியை வேறெங்கும் காண இயலாது. இவளது திருவடிகள் ஒரு அசுரனை மிதித்த நிலையில் இருக்கிறது. இங்கு தரப்படும் மூலிகையை குழந்தை இல்லாத தம்பதிகள் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. நீண்ட காலம் நோயால் அவதிப்படுபவர்களும் அம்மனை தரிசித்து நிவாரணம் பெற வருகிறார்கள்.