ADDED : ஆக 02, 2024 01:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெற்றோர் இறந்த தேதி, திதி தெரியாவிட்டால் ஆடிஅமாவாசையன்று திதி கொடுக்கலாம்.
தந்தையைக் குறிக்கும் கிரகம் சூரியன் என்பதால் 'பிதுர்காரகர்' என்றும், தாயைக் குறிக்கும் கிரகம் சந்திரன் என்பதால் 'மாதுர்காரகர்' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆண்மை, நிர்வாகம், வீரத்தை அளிக்க வல்லவர் சூரியன். மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம் தர வல்லவர் சந்திரன்.
இருவரும் இணையும் இந்நாளில் முன்னோரை வழிபட்டால் நல்வாழ்வு அமையும். காகத்துக்கு உணவிட்ட பின் விரதம் முடிக்கலாம். பசுவுக்கு கீரை, பழம் கொடுப்பதும், அன்னதானம் செய்வதும் நல்லது.