
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமாவாசை தலமான அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். போரில் வெற்றி பெற யாகம் செய்து ராமர் இந்த அம்மனை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் கரிய நிறத்துடன் சிங்க முகம், 18 கைகளுடன் காட்சி தருகிறாள். ஆடி அமாவாசையன்று இங்கு நிகும்பலா என்னும் மிளகாய் வத்தல் யாகம் நடக்கும். இதில் மிளகாயின் நெடி இருக்காது. அமாவாசையன்று பிரத்யங்கிராவை வழிபட எதிரி தொல்லை மறையும். கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் அய்யாவாடி உள்ளது.