
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழிக்குத்துணை திருமென்
மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத்துணை முருகா என்னும்
நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
முருகப்பெருமானின் திருப்பாதம் கண்ணுக்கு துணை. என்னுடைய பேச்சிற்கு அவனுடைய பெயர்களே துணை. முற்பிறவியில் செய்த தீவினையை போக்க அவனது பன்னிரண்டு தோள்களே துணை. செல்லும் பாதையில் என் வழிக்குத் துணை அவனது வேலும் மயிலும் துணை. செங்கோட்டு வேலவரே எனக்கு உற்ற துணைவன் என்கிறார் அருணகிரிநாதர்.